என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
  X

  மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  • போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

  கடலூர்:

  மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் திலகர் தலைமையில், நிர்வாகிகள் ரமேஷ், ரவிக்குமார், சீத்தாராமன், ராமச்சந்திரன், மணி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென்று மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டு கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

  Next Story
  ×