என் மலர்
நீங்கள் தேடியது "Elderly Manabangam"
- கடலூர் அருகே மூதாட்டியை தாக்கி மானபங்கம்- 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- அன்பழகியை அசிங்கமாக திட்டி கையை பிடித்து இழுத்து மானப்பங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் சேர்ந்தவர் தனசிங். இவரது மனைவி அன்பழகி (வயது 62). சம்பவத்தன்று மூதாட்டி அன்பழகி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த விஜயகுமார் குடித்துவிட்டு திடீரென்று அன்பழகியை அசிங்கமாக திட்டி கையை பிடித்து இழுத்து மானப்பங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விஜயகுமார் மனைவி சித்ரா, மகள் அகல்யா ஆகியோர் அன்பழகியை கழியால் தாக்கியதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த அன்பழகி சத்தம் போட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் விஜயகுமார், சித்ரா, அகல்யா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்






