என் மலர்tooltip icon

    கடலூர்

    • போலீசார் திருவெண்ணைநல்லூர் தாலுகாவை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர்.
    • கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வந்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி கடந்த 23-ம் தேதி தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

    இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நபரின் மார்பில் கஸ்தூரி என்று பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்தும், கொலையாளிகள் குறித்து விசாரித்து வந்தனர். தலை வெட்டப்பட்டதால் 3 நாட்கள் கொலை செய்யப்பட்டவரின் விவரத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது மகனை காணவில்லை என விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறி இருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அதில், கிளியனூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கொந்தமூரில் பெண்ணை கற்பழித்த வழக்கில், சிறையில் இருந்து வெளியே வந்த, திருவணெ்ணைநல்லூர் சரவணப்பாக்கத்தை சேர்ந்த கொத்தனார் ராஜதுரை( 32) நீதிமன்ற பிடிவாரண்டு பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளியனூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டதும், அதன் பிறகு அவர் காணாமல் போனதும் தெரிய வந்தது.

    இதையடுத்து, சென்னையில் இருந்த ராஜதுரையின் மனைவி முனியம்மாளை வரவழைத்து விசாரித்தனர். அதில் தனது கணவர், மார்பில் கஸ்தூரி என்ற பெயரை பச்சை குத்தியிருந்திருந்தார் என்பதை உறுதி செய்தனர். அதன் பிறகு ராஜதுரையின் மொபைல் போனிற்கு வந்த எண்களை வைத்து, போலீசார் திருவெண்ணைநல்லூர் தாலுகாவை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர்.

    அதில், திருவணெ்ணைநல்லூர் அடுத்த கொத்தனூர் பகுதியை சேர்ந்த சிவா(22) சரவணப்பாக்கத்தை சேர்ந்த உதயா( 25) கொத்தனூரை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் தலைமைறைவாக உள்ள சிலர் சேர்ந்து ராஜதுரையை அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. நீண்ட நாட்களாக சிவா, உதயா, மோகன்ராஜ், கொலை செய்யப்பட்ட ராஜதுரை உள்ளிட்டோர் நண்பராக சுற்றி வந்துள்ளனர்.

    கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ராஜதுரை, கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி, உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, சிவா, உதயா, மோகன்ராஜ் உள்ளிட்டோருக்கும், ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ராஜதுரை, அனைவரின் முன்னிலையில் அவர்களை தாக்கியுள்ளார். அதில் இருந்து அவர்கள், ராஜதுரை மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

    கடந்த 12-ந் தேதி சிவா, உதயா உள்ளிட்ட சிலர், தடுத்தாட்கொண்டோர் கிராம ஏரிக்கரைக்கு, ராஜதுரையை சமரசம் பேசுவதற்கு வரவழைத்துள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்திக்கொண்டிருக்கும் போது, அவரை தடியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியதும், மறுநாள் வந்து பார்த்த போது அவர் இறந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரது உடலை அதே பகுதியில் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்து, விட்டு, புதுச்சேரிக்கு சென்றுள்ளனர்.

    அங்கு அவர்களின் நண்பரான புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக்( 22) உதவியோடு, அழுகிய நிலையில், உடலை தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டி, இரு பாலித்தீன் பையில் கட்டி வாகனத்தில் சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவக்கரை கல்குவாரியில் வீசி விட்டு சென்றாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் பேரில் சிவா, உதயா, மோகன்ராஜ், புதுச்சேரியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு உதவியாக இருந்த திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்த கறிக்கடைக்காரர் ரெமோ என்கின்ற அபியை போலீசார் கைது செய்தனர். இவரிடம் விசாரணை செய்த போது ராஜதுரை உடலை கார் மூலமாக புதுவைக்கு எடுத்து வர வந்து உதவி செய்ததும் மேலும் அவர்களுக்கு புதுவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கொலையாளிகளை தங்க வைக்க உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அபி புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கு குடி பெயர்ந்து உள்ளார். இதனால் புதுவையில் உள்ள நண்பர்கள் மூலமாக மற்றவர்களுக்கு அறிமுகம் ஆகி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அபி திண்டிவனத்தில் 12-வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், அதேபோல நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் வேட்பாளரை தாக்கிய வழக்கும் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொத்தனார் ராஜதுரை வழக்கில் முக்கிய குற்றவாளியாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூகநத்தத்தை சேர்ந்த மாரி செயல்பட்டது தெரிய வந்தது. அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். இவர் இக்கொலையில் கூலிப்படையாக செயல்பட்டது தெரிய வந்தது. கைதான மாரி மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்கு உள்ளது போலீஸ் விசாரணயைில் தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி இக்கொலை தொடர்பாக சரவணம் பாக்கத்தை சேர்ந்த ஜபாலூதீன், ராஜகுமரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளது.

    கொலை செய்யப்பட்ட ராஜதுரையின் தலை, கை, கால்களை கல்குவாரியில் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் கல்குவாரி சுமார் 150 அடி ஆழத்தில் உள்ளதால் உடல் பாகங்களை கண்டுபிடிப்பதில் சிரமமம் ஏற்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் படிப்படியாக வலு இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிகழ்வு காரணமாக, இன்று முதல் வருகிற 2-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • விரைவில் ஃபெங்கல் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து இன்று அல்லது நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    புயல் உருவானாலும் பின்னர் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    • தேவனம்பட்டில் தனியார் பேருந்தில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
    • மஞ்சக்குப்பத்தில் அரசு பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் தனியார் பேருந்தில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    அதேபோல் தனியார் பேருந்தில் மாணவன் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இதையடுத்து மஞ்சக்குப்பத்தில் அரசு பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் விபத்தில் உயிரிழந்த மாணவனின் தந்தை கலந்து கொண்டு பேசியதாவது-

    பசங்களா தயவு செஞ்சி பஸ்ல ஏறுனா படியில நிக்காம உள்ள போயிடுங்க.. என் புள்ள போயிட்டான்பா உங்க காலுல விழுந்து கெஞ்சி கேக்குறேன் என்று மாணவர்கள் முன் கதறி அழுத தந்தையை அருகில் இருந்த காவல்துறையினர் தேற்றினர்.

    • ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன.
    • 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தற்போது மரக்காணம் பகுதிகளில் விவசாய நிலங்களின் மணிலா நெல்லு, மரவள்ளிக்கிழங்கு விவசாய நிலங்களில் பயிரிட்டு உள்ளார்கள். அது தற்போது மழையினால் மூழ்கியது.

    கந்தாடு வண்டிப்பாளையம் கிளாப்பக்கம், ஓமிப்பேர், நாமக்கல் மேடுகாயல், மேலே எடசேரி, உப்பு வேலூர், கீழ்பெட்டை, அனுமந்தை, கூனிமேடு, மண்டபாய், ஆலப்பாக்கம் கலியங்குப்பம், செய்யாங்குப்பம் போன்ற கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்தது மழை தண்ணீரில் மூழ்கியது.

    அதுபோல், பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் செல்வதால் வண்டிப்பாளையம் ஆதிகுப்பம் பகுதியில் தண்ணீர் செல்வதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கிலோமீட்டர் சுற்றி புதுவைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    தற்போது மரக்காணம் பகுதிகளின் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
    • காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல் காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    • ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவிப்பு.
    • துறைமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போதே கடலூர் அஞ்சலையம்மாள் துறைமுகம் என்று அறிவிக்க வேண்டும்.

    கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்திருக்கிறது.

    கடலூரில் புதிய துறைமுகம் அமைக்கப் வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. புதிய துறைமுகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

    புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகத்திற்கு கடலூரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும். அது தான் அவருக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

    கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை.

    வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர்.

    அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியப் போதே, அஞ்சலையம்மாளும் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

    உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல்போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல ஆண்டு சிறையில் இருந்தார்.

    கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கை இன்று வரை ஏற்கப்படவில்லை.

    இந்த நிலையில் புதிதாக திறக்கப்படவுள்ள துறைமுகத்திற்காவது அவரது பெயரைச் சூட்ட வேண்டும். துறைமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போதே கடலூர் அஞ்சலையம்மாள் துறைமுகம் என்று அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதானி நிறுவனம் மீது அமெரிக்க அரசின் நீதித்துறை குற்றச்சாட்டு வைத்து வழக்குத் தொடுத்துள்ளது.
    • அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களால் ஆளுமை செய்த கட்சி.

    சிவகங்கை:

    சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும். அக்கட்சியின் தலைமை அரசுக்கு தலைமைவகிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறி வருகிறார். அவரது கருத்து நியாயமானதுதான்.

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களால் ஆளுமை செய்த கட்சி. தற்போது அது போன்ற ஆளுமை இல்லாததால் அந்த கட்சி குழப்பத்தில் இருக்கிறது.

    1967-ல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது உடனடியாக நடக்காது. நாங்கள் வளர வேண்டும், கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதில் தான் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பிறகுதான் தனித்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

    தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் குற்றங்களை காவல்துறை தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்தக்குற்றங்கள் பள்ளி வளாகம், நீதிமன்ற வளாகம், மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்துள்ளதுதான் கவலையளிக்கிறது. இது குறித்துதான் கேள்வி எழுப்பப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இச்சம்பவங்கள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை கூறுவதில் எந்த கூச்சமும், தயக்கமும் எனக்கு இல்லை.

    அதானி நிறுவனம் மீது அமெரிக்க அரசின் நீதித்துறை குற்றச்சாட்டு வைத்து வழக்குத் தொடுத்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் திரட்டிய நிதியை இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசும் பிரதமரும் எந்தக்கருத்தையும் கூறவில்லை. இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.
    • பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டையில் இருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    குமராட்சியை சேர்ந்த ஹரிதரன் (வயது 60) என்பவர் பஸ்சை ஓட்டினார். சிதம்பரம் அருகே வேலக்குடியை சேர்ந்த அருள்மணி என்பவர் கண்டக்டர் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள நிறுத்தத்திற்கு காலை 7.30 மணி அளவில் வந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த சந்திரன் மனைவி தையல்நாயகி (52) என்பவர் பஸ்சில் ஏறி, பின்பக்க இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் பஸ் புறப்பட்டு, புதுப்பேட்டை அருகில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.

    இதில் நிலை தடுமாறிய தையல்நாயகி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு உடனே, ஹரிதரன் பஸ்சை நிறுத்தினார். விபத்தில் தையல் நாயகியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

    கடலூர்:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.

    நவம்பர் 25-ந்தேதி முதல் பருவமழை வலுவடையும். 26 மற்றும் 27-ந் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் , கடலில் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் நேற்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தற்போது கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் தாழங்குடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக முன்னோக்கி கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். இது மட்டுமின்றி அதிகளவில் கடல் சீற்றம் ஏற்பட்டால் படகுகள் இழுத்துச் செல்லப்பட்டு விடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 

    • மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.
    • மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்த 12 வயது மாணவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இப்பள்ளியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். நேற்று வியாழக்கிழமை காலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும். சத்து மாத்திரைகள் (போலிக் ஆசிட் இரும்பு சத்து மாத்திரை)அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாத்திரைகளை சாப்பிடாத மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் மாத்திரைகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

    இந்த நிலையில் தண்ணீர் குடிக்கும் இடத்திற்கு வந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒரே நேரத்தில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டால் உடம்பில் சத்து அதிகரிக்கும் என எண்ணி அங்கிருந்த 15 மாத்திரைகளை மொத்தமாக ஒரே நேரத்தில் உட்கொண்டு உள்ளார். இதில் மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று கல்லூரி மாணவியை திடீரென்று காணவில்லை.
    • சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திருச்சி தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி மாணவியை திடீரென்று காணவில்லை.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மாணவியிடம் விசாரித்த போது 4 பேர் கொண்ட கும்பல் என்னை கடத்திச் சென்று சேலத்தில் அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×