என் மலர்
சென்னை
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை:
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் நாளை (28-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் - ராஜாகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா அய்யர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுரம்மன்கோவில் தெரு, பாளையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு, அவ்வை நகர், கண்ணன் நகர் மற்றும் ஐ.ஓ.பி. காலனி, சிட்லபாக்கம் ஜிஎஸ்டி சாலை, சித்தா மருத்துவம், சுந்தரம் காலனி 1, 2, 3-வது பிரதான தெரு, எஸ்.வி.கோயில் தெரு, வி.வி.கோவில் தெரு, ரெயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, ஜெயா நகர் மெயின் ரோடு 1, 2, 3 குறுக்குத் தெரு, வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு குப்புசாமி தெரு, மாதவன் தெரு, சுந்தராம்பாள் நகர், ஷர்மிளா நகர், நீர் வாரியம், ஜீவா நகர், குமரன் தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி.
அம்பத்தூர் - ஜெ.ஜெ நகர் சர்ச் சாலை, டிரினிட்டி சர்ச் சாலை, ஓ.வி.ஜோசப் தெரு, வசந்தா தெரு, லிசா பொன்னம்மாள் தெரு, சீனிவாசன் தெரு, பாக்கியம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, செல்வி ஜெயக்குமார் தெரு, ஆரணி சுப்ரமணியன் தெரு, ஜார்ஜ் ரத்தினம் தெரு, சிசிலி புஷ்பம் தெரு, ரத்தினவேல் பாண்டியன் தெரு , ஜி.ஜி. நகர்.
திருவேற்காடு - மகாலட்சுமி கல்லூரி சுந்தர சோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயக நகர், செல்லியம்மன் நகர், பசுமை பூங்கா, சக்கரேஸ்வரி நகர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளி பிரியவதனா என்பவருக்கு பெண் ஓதுவாருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- கண் பரிசோதனை செய்து கொண்ட 100 பேருக்கு இலவச கண்ணாடி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
முதலாவது நிகழ்ச்சியாக ராஜாஜி நகரில் முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதியில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்கள் தங்கும் உறைவிடம், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக ரூ.8.48 கோடி செலவிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சார்பாக ரூ.5.25 கோடி செலவிலும் முதியோர் தங்கும் இடத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 22.61 கோடி மதிப்பீட்டில் இந்த 3 உறைவிடங்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த மூத்தக் குடிமக்கள் உறைவிடங்களில் வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவருந்தும் அறை, பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.

இந்த விழாவில் மாற்றுத் திறனாளி பிரியவதனா என்பவருக்கு பெண் ஓதுவாருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பாடல் ஒன்றை பாடினார்.
இதைத்தொடர்ந்து வி.கே.எம். காலனியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படித்த 350 மாணவ-மாணவிகளுக்கு தையல் எந்திரம் 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்ட 100 பேருக்கு இலவச கண்ணாடி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ரூ. 4.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா ஆகியவற்றை முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 318 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குமரன் நகர் 80 அடி சாலையில் புதுப்பிக்கப்பட்ட தணிகாசலம் நகர் கால்வாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் தொகுதியில் இன்று ஒரே நாளில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்று பெண்கள் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்து கோஷமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பா. ரங்கநாதன், பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளி நாகராஜன், மண்டல தலைவர் சரிதா, நிர்வாகிகள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- வெளிநாடு விவகாரங்களில் அப்துல்லா மூலம் தமிழர்களுக்கு சிறப்பான பணி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் எம்.பி.யாக விரும்புவதாக கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. கூட்டணிக்கு சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதுபோல அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
தி.மு.க. கூட்டணியில் வாய்ப்புள்ள 4 இடங்களில் கமல்ஹாசனுக்கு ஒரு எம்.பி. பதவி ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 3 இடங்களில் தற்போதைய எம்.பி. வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்படும் வழக்குகளை வில்சன் எம்.பி. திறம்பட கையாண்டு வருகிறார் என்ற நல்ல பெயர் இருக்கிறது.
சமீபத்தில் கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வில்சன் எம்.பி.யின் முயற்சி மூலம் சிறப்பான வெற்றி கிடைத்ததாக தகவல் வெளியானது. இதனால் அவர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார். எனவே வில்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விருப்பமாக இருக்கிறது.
அது போல தற்போதைய தி.மு.க. எம்.பி.க்களில் ஒருவரான எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.யாக இருந்த முகமது ஜான் திடீரென மரணம் அடைந்த நிலையில் அப்போது அந்த இடத்தை 2021-ம் ஆண்டு தி.மு.க. எம்.எம்.அப்துல்லா மூலம் நிரப்பியது.
அப்துல்லா இடைக்காலத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றதால் அவர் மேல்சபை எம்.பி. பதவியை 6 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யவில்லை. வாய்ப்பு கிடைத்த பதவி நாளில் அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். குறிப்பாக வெளிநாடு விவகாரங்களில் அப்துல்லா மூலம் தமிழர்களுக்கு சிறப்பான பணி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் எம்.பி.யாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தி.மு.க.வில் உள்ள இஸ்லாமிய தலைவர்களில் அப்துல்லா அளவுக்கு மேலிடத்துடன் நெருக்கமாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதன் மூலம் சிறுபான்மை சமுதாயத்துக்கு வாய்ப்பு அளித்த பெருமையையும் பெற முடியும் என்று தி.மு.க. தரப்பில் கருதப்படுகிறது. எனவே அப்துல்லா மீண்டும் எம்.பி.யாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் எம்.எம்.அப்துல்லாவுக்கு அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்று விருப்பம் உள்ளது. ஆனால் மேல்சபையில் இஸ்லாமிய பிரதிநிதி மூலம் பல்வேறு வெளிநாட்டு பணிகளை செய்யும் முடியும் என்று கருதப்படுவதால் அப்துல்லா மீண்டும் எம்.பி.யாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வில்சன், அப்துல்லா, கமல்ஹாசன் ஆகிய 3 பேரும் தி.மு.க. தரப்பில் மேல்சபை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்க வாய்ப்பு உள்ள நிலையில் 4-வதாக சண்முகத்துக்கு பதில் எம்.பி.யாக போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த 4-வது இடத்துக்கு புது முகத்தை கொண்டுவர தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
அந்த புதுமுகம் கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களை சார்ந்த நபராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அ.தி.மு.க. தரப்பில் தென் மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வேட்பாளரை பொறுத்து தி.மு.க.வில் அந்த வேட்பாளர் இருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் எம்.பி.யாக விரும்புவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இது தொடர்பாக பேசினார். ஆனால் தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ம.தி.மு.க. தரப்பில் வைகோ மகன் ஏற்கனவே எம்.பி.யாக இருப்பதால் வைகோவுக்கு இந்த தடவை தி.மு.க. சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் 4-வது எம்.பி. பதவி இடத்தை பெற தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மற்றபடி தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் மேல்சபை எம்.பி. பதவிக்கு விருப்பம் தெரிவித்து அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனவே 4-வது எம்.பி.யாக தேர்வு ஆகப்போகும் புது முகம் யார் என்பதில் தி.மு.க.வினர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் மேல் சபை எம்.பி. பதவிக்கு 2 பேரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலையில் அந்த பதவிகளை பிடிப்பதற்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செம்மலை, கோகுலஇந்திரா, தமிழ்மகன் உசேன், ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளருமான வக்கீல் ஐ.எஸ். இன்ப துரை, நடிகை விந்தியா உள்பட பலர் மேல்சபை எம்.பி.யாக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வெற்றி வாய்ப்பு உள்ள 2 எம்.பி. இடங்களில் ஒரு இடத்தை அ.தி.மு.க. நிச்சயம் தங்களுக்கு தரும் என்று தே.மு.தி.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் மிகவும் உறுதியாக நம்புகின்றன. இதற்காக திரைமறைவில் அந்த 2 கட்சிகளும் அ.தி.மு.க. தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பாக இந்த தேர்தலை பா.ஜ.க. கருதுகிறது. எனவே டாக்டர் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க செய்து கூட்டணியை வலுப்படுத்த பா.ஜ.க. தலைவர்களும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் மேல்சபை எம்.பி. பதவியை யாராவது ஒரு கட்சிக்கு வழங்கினால் மற்ற ஒரு கட்சி அதிருப்திக்கு உள்ளாகலாம். அதோடு அது அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைவதற்கு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
இதை கருத்தில் கொண்டு தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மேல் சபை எம்.பி. பதவி வாய்ப்பை கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அ.தி.மு.க. சார்பில் 2 பேர் மேல் சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்படவுள்ள 2 மேல்சபை எம்.பி.க்களில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த நபர் புதுமுகமாக இருக்கலாம் என்றும், ஜெயலலிதா பாணியில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த புதுமுக வேட்பாளரை எடப்பாடி தேர்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யாகும் வாய்ப்பு யார்-யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தேர்வாகும் 4-வது எம்.பி. இடத்தை காங்கிரஸ் மேலிடம் கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை தி.மு.க. தலைவர்கள் உறுதி செய்யவில்லை.
அது போல அ.தி.மு.க. கூட்டணியில் வாய்ப்பு உள்ள 2 இடங்களில் ஒரு இடத்தை பா.ஜ.க. கேட்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையை மனதில் வைத்து பா.ஜ.க. காய் நகர்த்துகிறதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, மேல்சபை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு இடம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.
- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது.
- நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர், மேல்பவானியில் 30 செ.மீட்டர் கனமழை பெய்துள்ளது.
- இன்றும் நாளையும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர், மேல்பவானியில் 30 செ.மீட்டர் கனமழை பெய்துள்ளது.
கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 21 செ.மீட்டர், நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் 18 செ.மீட்டர் கனமழை பதிவானது. தற்போது, தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது.
இந்தநிலையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதன் காரணமாக இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
- தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
- பா.ம.க. யாருடன் கூட்டணி என்பதும் இதுவரை முடிவாகவில்லை.
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த முறை அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாம் என பா.ம.க. எண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனக்கு எம்.பி. பதவி வேண்டாம் என்பதில் பா.ம.க. தலைவர் அன்புமணி உறுதியாக இருப்பதாகவும், கட்சியின் தலைவராக மாநில அரசியலில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. யாருடன் கூட்டணி என்பதும் இதுவரை முடிவாகவில்லை. கூட்டணி முடிவாகாததால் எந்த கட்சியிடமும் ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாம் என்றும் ராஜ்ய சபா சீட் கேட்டால் சட்டசபை தேர்தலில் கூட்டணி பேர வலிமையை குறைக்கும் என்றும் பா.ம.க. எண்ணுகிறது.
முழுக்க முழுக்க மாநில அரசியல் என்பதில் அன்புமணி திட்டவட்டமாக இருப்பதாகவும், மாநில அரசியலில் பங்கெடுத்து அமைச்சரவையில் இடம் பெறுவதே பா.ம.க.வின் இலக்கு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி அரசியலை பா.ம.க. தலைமைக்கு நம்பிக்கைக்கு உரிய வேறு ஒருவரிடம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தி.மு.க. நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது!
- ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது தி.மு.க.?
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி!
அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் தி.மு.க. கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் தி.மு.க. அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல தி.மு.க.வினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான்- இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது- தி.மு.க. இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது-
தி.மு.க. நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது!
போதை இளைஞரிடம் கத்தி- பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது .
இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது?
இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா மு.க.ஸ்டாலின்?
ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது தி.மு.க.? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், #யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது!
தி.மு.க. கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை.
நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்- குறிப்பாக தி.மு.க.-வினரிடம் இருந்து!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- கடந்த 5 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்துடன் காணப்பட்டது. கடந்த 20-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 710-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 680-க்கும் விற்பனையானது. மறுநாளே, அதாவது 21-ந்தேதி கிராமுக்கு ரூ.220-ம், பவுனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, முறையே ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 930-ம், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இது, அதிகரித்து கடந்த 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 990-ம், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 920-ம் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-05-2025- ஒரு கிராம் ரூ.111
25-05-2025- ஒரு கிராம் ரூ.111
24-05-2025- ஒரு கிராம் ரூ.111
23-05-2025- ஒரு கிராம் ரூ.111
22-05-2025- ஒரு கிராம் ரூ.112
- மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது.
- திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர், மேல்பவானியில் 30 செ.மீட்டர் கனமழை பெய்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு எச்சரிக்கை), திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 289 மாணவ, மாணவிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள்.
- மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 7-ந்தேதி தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இளங்கலை படிப்புகளுக்கு 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 289 மாணவ, மாணவிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.
மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.
- இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும். ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்.
இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?
ஒரு கூட்டணி அமைந்ததற்கே உங்களுக்கு பொறுக்க முடியவில்லை. இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை விழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற நெறிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






