என் மலர்
நீங்கள் தேடியது "Edapadi palaniasamy"
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.
- இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும். ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்.
இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?
ஒரு கூட்டணி அமைந்ததற்கே உங்களுக்கு பொறுக்க முடியவில்லை. இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.
- தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 8 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் விசாரணையில், மனு தாரர்கள், எதிர் மனு தாரர்கள், அவர்களுடைய பதில், ஆட்சேபனைகள் இருந்தால் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
அதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் தெரிவித்த பிறகு இதுகுறித்து விசாரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சூரிய மூர்த்தியின் மனுவின் மீது இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தில், எதிர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவின் நகல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு கால அவகாசமும் கோரப்பட்டிருக்கிறது.
அதிமுகவில் பிரிவு எதுவும் கிடையாது, இபிஎஸ் தலைமையில் இருப்பதுதான் அதிமுக.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது.
- வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
சென்னையில், காதலிப்பதாக கூறி அழைத்து சென்று 3 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வௌயிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும்.
"SIR" போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது.
இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திய உரிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்.
பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திய உரிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக சூடுபிடித்திருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக பேசப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. எனவே, மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபடத் தொடங்கியது.
தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை திடீரென சந்திக்க இருக்கும் தகவல் வெளியானது. இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.
சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு இரவு 7.45 மணியளவில் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. #TNRains #TNREDAlert #EdappadiPalaniswami #TNGovernor #BanwarilalPurohit






