அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 289 மாணவ, மாணவிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
Published on

சென்னை:

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 7-ந்தேதி தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இளங்கலை படிப்புகளுக்கு 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 289 மாணவ, மாணவிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com