என் மலர்
சென்னை
- சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரெயில்கள் ரத்து.
- 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ரெயில்வே பணிகள் நடைபெறுவதால் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படு இருக்கிறது. 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
- பல்லடம் அருகே கன்டெய்னர் லாரி சாலையில் நின்றவர்கள் மீது மோதியது.
- இந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்லடத்தில் கன்டெய்னர் விழுந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பல்லடம் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், தடை செய்யப்பட்ட குட்காவும் கடல் போலப் பெருகிக் கிடந்ததை எல்லாம் பழனிசாமி மறந்து விட்டாரா?
- குட்கா பாஸ்கர் என மக்கள் கூறும் அளவு அமைச்சர்களை வைத்து குட்கா விற்று கல்லா கட்டிய பழனிசாமியா போதைப் பொருட்கள் பற்றிப் பேசுவது?
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் பண்ருட்டி அருகே மூதாட்டி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வழக்கில் விரைவாகக் காவல்துறையினர் குற்றவாளி சுந்தரவேல் என்பவனைச் சுற்றி வளைத்துச் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை; கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளதைக் கண்டு பொறுக்க முடியாத பழனிசாமி வழக்கம்போல அவதூறு அரசியலைத் தொடங்கியிருக்கிறார்.
பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் சூழல் நிலவியது. தற்போது அது மாறி பெண்களுக்கு எதிராக எவர் குற்றச்செயலில் ஈடுபட்டாலும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்படுகிறார்கள். அதோடு வழக்கு விசாரணையை விரைந்து முடித்து உச்சபட்சத் தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
2018 செப்டம்பரில் 60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், "18 மாத கைக்குழந்தை முதல் 100 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?'' என பழனிசாமி ஆட்சியை பற்றித்தான் அன்றைக்குக் கேள்வி எழுப்பினார். இதையெல்லாம் மறந்துவிட்டு கூச்சமே இல்லாமல் யோக்கிய சிகாமணி போல பழனிசாமி வேஷம் போடுகிறார்?
* 2021 ஜனவரியில் துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையில் 68 வயதான மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கஞ்சாவுக்கு அடிமையான 16 வயது சிறுவன்.
* 2021 பிப்ரவரியில் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் 80 வயது மூதாட்டிக்குப் பாலியல் வன்கொடுமை.
* 2020 செப்டம்பரில் மதுரை மேலூர் அருகே குடிபோதையில் 80 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.
* 2020 அக்டோபரில் திருநெல்வேலி: பணகுடி கோரி காலனியில் 68 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.
* 2020 டிசம்பரில் பொள்ளாச்சி அருகே உள்ள நம்பியமுத்தூர் பகுதியில் கணவரை இழந்த 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.
இப்படி பழனிசாமி ஆட்சியில் மூதாட்டிகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைப் பட்டியலிட முடியும்.
தனது ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்களை மறந்துவிட்டு திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மட்டுமே பூதாகரமாகப் பேசுவதைப் பார்த்தால் பழனிசாமி மறதி நோய்க்குச் சிகிச்சை பெறுவது நல்லது.
பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி பெண்கள் பாதுகாப்பில் துளியும் சமரசமின்றித் திராவிட மாடல் அரசு செயலாற்றி வருவதால்தான், இன்று இந்தியாவிலேயே அதிகமாகப் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
அதோடு இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அதன் காரணமாகத்தான் பெண்கள் விரும்பும் ஆட்சியாகவும், பெண்களின் பெரும் ஆதரவு பெற்ற முதலமைச்சராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
இதனையெல்லாம் கண்டு பொறுக்காமல் எங்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடாதா? அதை வைத்து அரசியல் செய்ய முடியாதா? என நாள்தோறும் அலைகிறார் பழனிசாமி. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் கூட உள்நோக்கத்தோடு அதை வைத்து அரசியல் செய்கிறார். பழனிசாமியின் இந்த அரசியல் மறைமுகமாகப் பெண்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது.
பெண்களுக்குப் பயத்தை உண்டாக்கி அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் பாஜக-வின் கொள்கையை பழனிசாமி வழிமொழிவது வெட்கக்கேடானது.
பழனிசாமியின் ஆட்சி பெண்களுக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியாக இருந்ததற்கு பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமையே சாட்சி. பாலியல் குற்றவாளியான அதிமுக நிர்வாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமிக்கு, தற்போது பெண்களின் பாதுகாப்பே முதன்மை என ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரைப் பற்றி பேச எந்தத் தகுதியுமில்லை.
அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், தடை செய்யப்பட்ட குட்காவும் கடல் போலப் பெருகிக் கிடந்ததை எல்லாம் பழனிசாமி மறந்து விட்டாரா? குட்கா பாஸ்கர் என மக்கள் கூறும் அளவு அமைச்சர்களை வைத்து குட்கா விற்று கல்லா கட்டிய பழனிசாமியா போதைப் பொருட்கள் பற்றிப் பேசுவது? அதிமுக ஆட்சியில் மக்களைச் சீரழித்த கஞ்சா, குட்கா போதைப் பொருட்களை எல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி அதன் புழக்கத்தைத் தடுத்துள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்குத் தெரியும்.
தனது கூட்டணிக்குள் நடக்கும் குஸ்தியையும், பாஜகவின் ஆட்சி அதிகார மிரட்டல்களையும் சமாளிக்க முடியாமல் திணறும் அடிமை பழனிசாமி அதை மடைமாற்ற வீண் அவதூறுகளைக் கொட்டி என்னதான் கலர் கலராய் ரீல் விட்டாலும் அது எதுவும் மக்கள் மத்தியில் எடுபடாது.
தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள் 2026-ல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.O அமையும், முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவது உறுதி. கையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது காப்பாற்றிக் கொள்வீரா? இல்லை அதையும் அமித் ஷா காலடியில் அடமானம் வைத்துவிட்டீரா? அடிமை பழனிசாமி அவர்களே!
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம்.
- இந்தக் கணக்கெடுப்பு. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது. இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்தக் கணக்கெடுப்பு. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் ஒன்றிய அரசு. மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும்.
இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும். உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Comm) நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்தப் புதிய சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வில் (Cinte Survey), மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்தத் தரவுகள் முழுமையாகச் சேகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. இதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு செய்ய வேண்டியது இதைத்தான்.
எனவே. தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக. வாழ்வாதார. பொருளாதார. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும். அந்த ஆய்வானது. அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு. பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.
அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அத்துடன் எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை. கபட நாடகத் திமுக அரசு, பிளவுவாத பாஜக அரசுடன் இணைந்து அமல்படுத்தத் தவறினால், இந்த மக்கள் விரோத அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம்.
- ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன.
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது.
நாளை மதுரை விரகனூரில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிட வேண்டும். ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி, வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்! என கூறினார்.
- மேயராக இருந்தபோது மற்றொருவருக்கு ஒதுக்கிய நிலத்தை மனைவி பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு.
- இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை 24-ல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் என சென்னை சிறப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.
இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- 21ஆம் தேதி சனிக்கிழமை எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.
- 22ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.
வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 21ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45-க்கு நெல்லை சென்றடையும்.
ஜூன் 22 ஆம்தேதி (ஞாயிறு) நெல்லையில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.
- பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
- ரூ. 5 லட்சத்தை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியீடு.
பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 2026 இல் நிறைவடையும் என்றும் 2027ம் ஆண்டுக்குள் 2 ஆம் கட்ட பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாதிரி வீடியோ வெளியானது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.
2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என கூறினார்.
- தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
- ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.
ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது.
கடந்த 2014-2016 வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றியிருந்தார்.
கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவரது தலைமையிலான குழு கீழடியில் ஆய்வு செய்தபோது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூருவில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் மத்திய தொல்லியல் துறை வழங்கியது.
அசாமில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவிட்டது.
இந்தநிலையில், மீண்டும் கீழடி அகழாய்வு பணியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது. கீழடி தொடர்பாக 982 பக்க அகழாய்வு அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த நிலையில், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக தற்போது உள்ளார்.
- தே.மு.தி.க. தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்.
- நமக்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொகுதி வாரியாக நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளரிடம் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்:
* கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. நம்மை மதிக்கவில்லை.
* கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வினர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
* தே.மு.தி.க. தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்.
* நிர்வாகிகளுக்கு செலவுக்கு பணம் போதுமானதாக இல்லை. தலைமைக்கழகத்தில் இருந்து பணம் கொடுத்தால் பேருதவியாக இருக்கும்.
* 6 மாதத்திற்கு ஒருமுறை பல்வேறு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
* நமக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளை பலப்படுத்தி, கூட்டணியின்போது தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்.
* குறிப்பாக இந்த முறை நாம் எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்.
* நமக்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.






