என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பல்லடம் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்
- பல்லடம் அருகே கன்டெய்னர் லாரி சாலையில் நின்றவர்கள் மீது மோதியது.
- இந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்லடத்தில் கன்டெய்னர் விழுந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பல்லடம் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.






