என் மலர்tooltip icon

    சென்னை

    • எங்கள் பள்ளியைச் சுற்றி சுவர் எழுப்பினால், தோட்டம் அமைத்து, தூய்மையாகப் பராமரிக்க முடியும்.
    • ஸ்மார்ட் வகுப்பறையும் அமைத்துக் கொடுத்தீர்கள் என்றால் எங்களின் கனவு நிறைவேறிவிடும் என்று தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் குருங்களூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் ஞானதர்ஷினி என்ற மாணவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் நாளிதழில் வெளியாகி இருந்தது. அக்கடிதத்தில்,

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குருங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். இந்தப் பள்ளியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகள்களும், மகன்களும்தான் படித்து வருகிறோம். மாணவர்களுக்கான உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்று பல நல்ல திட்டங்களை எங்களுக்காகச் செய்திருக்கிறீர்கள். இதற்காகத் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இதை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். உங்களிடம் இரண்டு கோரிக்கை, எங்கள் பள்ளியைச் சுற்றி சுவர் எழுப்பினால், தோட்டம் அமைத்து, தூய்மையாகப் பராமரிக்க முடியும். அப்படியே ஸ்மார்ட் வகுப்பறையும் அமைத்துக் கொடுத்தீர்கள் என்றால் எங்களின் கனவு நிறைவேறிவிடும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், இக்கடிதத்தை மேற்கோள்காட்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில்,

    அன்பு மாணவி ரா.ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும்.

    முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாணவியின் இரண்டு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

    இன்றே குருங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 



    • ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம்.
    • முதல் கட்டமாக 50 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவை மெரினாவில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம். தொட்டியில் தண்ணீர் தீர்ந்து போனால், குடிநீர் வாரியத்துக்கு IOT தொழில்நுட்பம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாகத் தண்ணீர் நிரப்பப்படும்.



    முதல் கட்டமாக 50 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.

    • படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.
    • வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.

    அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து விறுவிறுவென உயரத் தொடங்கியது. அதன்படி 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தையும், 13-ந்தேதி ரூ.74 ஆயிரத்தையும் கடந்தது.

    அன்றைய தினம் விலைதான் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளும் விலை உயர்ந்து, மேலும் புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் விலை சற்று குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 305-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து வந்துள்ளது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,250-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 122 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600

    16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440

    15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-06-2025- ஒரு கிராம் ரூ.120

    16-06-2025- ஒரு கிராம் ரூ.120

    15-06-2025- ஒரு கிராம் ரூ.120

    14-06-2025- ஒரு கிராம் ரூ.120

    13-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • ஒவ்வொருவரரிடமும் 200 வாக்காளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களது வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
    • இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மகாலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. சார்பு அணிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சார்பு அணி என்பது சாதனை படைக்கும் அணி. நம்முடைய தி.மு.கழகம்தான் சார்பு அணியை சார்ந்திருக்கிறது. சார்பு அணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அந்த வகையில் நம்முடைய முதல்வரையே இளைஞரணி தான் உருவாக்கியது. பொதுச் செயலாளரை மாணவரணி உருவாக்கியது. நம் மாநிலம் மட்டுமின்றி மற்ற மாநிலத்துக்கும் உரிமையை மீட்டு கொடுத்தது நமது வழக்கறிஞர் அணி. தேர்தல் நேரங்களில் தகவல் தொடர்பு அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஒவ்வொருவரரிடமும் 200 வாக்காளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களது வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தி.மு.க.வில் 25 அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வோ 25 அணிகளாக பிரிந்து விட்டது. அக்கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்படுவதில்லை. தற்போது அமித்ஷா கட்டுப்பாட்டில் தான் அ.தி.மு.க. உள்ளது. பா.ஜ.க. சூழ்ச்சி வலையில் பழனிசாமி மாட்டிக்கொண்டார்.

    மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால், மத்திய அரசு ரூ.2,500 கோடி தர முடியாது என்றது. நமது முதல்வரும் தேவையில்லை என்றார். தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறையும். இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான். ஊழலால் தண்டிக்கப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு தி.மு.க.வை ஊழல் கட்சி என்று அமித்ஷா கூறுகிறார். பா.ஜ.க. ஊழல் பட்டியலை வெளியிட்டால் நீண்டு கொண்டே போகும்.

    ஆட்சியில் அ.தி.மு.க. இருந்திருந்தால் மும்மொழி என்ன, 10 மொழிக் கொள்கையையே ஏற்றுக் கொண்டிருப்பார். ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக உரிமையை பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. அடகு வைத்துவிட்டது. நமது சார்பு அணியினர் மக்களோடு, மக்களாக நெருங்கி பழக வேண்டும். அரசின் சாதனைகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும். மாவட்ட கழக அனுமதி பெற்று தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும். நம்மிடம் சிறுசிறு பிரச்சனைகள் இருக்கலாம். அதை அமர்ந்து பேசினாலே தீர்ந்து விடும். வீட்டில் உட்கார்ந்து கொண்டு உறுப்பினர்கள் சேர்க்க வேண்டாம்.

    மக்களை நேரில் சந்தித்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் கூடுதல் வாக்குகள் பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டு இருக்கிறார்.
    • 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா.

    சென்னை:

    வருகிற 21-ந்தேதியன்று கொண்டாடப்படும் 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டு இருக்கிறார். 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா.

    தமிழ்நாடு கவர்னர் மாளிகை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2025 சர்வதேச யோகா தின நிகழ்விற்காக நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள் தவிர பிற பிரிவுகள் உள்பட பல்வேறு துறைகளிலும் பரவலான பங்கேற்பை செயல்படுத்த, ஒரு பிரத்யேக https://events.annauniv.edu/ என்ற இணையவழி சேவையை தொடங்கி உள்ளது. யோகா பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை, இணையவழி வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

    • சீஷெல் ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அண்ணா நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் உள்ள சீஷெல் ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    அண்ணா நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீஷெல் ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது. துரைப்பாக்கத்தில் உள்ள சீஷெல் ஓட்டலிலும் சோதனை நடைபெறுகிறது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ஜெய் நகர், ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை பகுதி, ஆர் நகர் பகுதி.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    திருவேற்காடு: வேலப்பன்சாவடி கோ-ஆப்பரேட்டிவ் நகர், காவேரி நகர், மாரியம்மன் கோவில் தெரு, தேவி நகர், சாய் அவென்யூ குடியிருப்பு, மாதர்வேடு பெருமாள் கோவில் தெரு, பூந்தமல்லி சாலை, நும்பல் சாலை, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு, மேத்தா மருத்துவமனை.

    கொரட்டூர்: பெருமாள் கோவில் தெரு, லேக் வியூ கார்டன், காவ்யா நகர், மேட்டு தெரு, காமராஜ் நகர், கண்ணகி நகர் 3-வது முதல் 8-வது தெரு வரை, தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் கொரட்டூர் 2-வது தெரு முதல் 4-வது தெரு வரை மற்றும் 26-வது தெரு முதல் 28-வது தெருவரை, கிழக்கு அவென்யூ, சாந்தி நகர் சென்ட்ரல் அவென்யூ, MTH சாலை, டிஎம்பி நகர், குபேரகணபதி தெரு, சர்ச் சாலை, அப்பாதுரை, சீரலம் தெரும், நேரு தெரு, அண்ணா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சாவடி தெரு, தில்லை நகர், வன்னியர் தெரு, பிராமின் தெரு, கிராமினி தெரு, ஆர்எஸ் சாலை, திருமலை நகர்.

    பல்லாவரம் டிவிசன்: நியூ தெரு, அம்பேத்கர் நகர், மந்திரி குடியிருப்புகள், சோழவரம் நகர், பாரதி நகர் மெயின் சாலை, பாரதி நகர் 1 முதல் 5-வது குறுக்கு தெரு, துலுக்காத்தம்மன் கோவில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மேட்டு தெரு, கபிலர் தெரு, வாத்தியார் தெரு விரிவு, கோவில் டவுன் சாலை, பாஷ்யம் நவரத்னா குடியிருப்பு, ஜெயின் குடியிருப்பு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6-வது வரை, சுப்புராயா நகர், காசி கார்டன், என்எஸ்கே தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் நகர், மகாலட்சுமி பள்ளி பகுதி, பார்வதி புரம் 1 மற்றும் 2-வது தெரு, ஆதம் நகர், சங்கர் நகர் 38 முதல் 41-வது தெரு, அப்பாசாமி, சங்கர்நகர் மெயின் ரோடு.

    காரம்பாக்கம்: ஜெய் நகர், ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை பகுதி, ஆர் நகர் பகுதி, மவுண்ட் பூந்தமல்லி சாலை.

    தாம்பரம்: இரும்புலியூர் பாரத மாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளூவர் தெரு, கந்தசாமி காலணி, எல்ஐசி காலணி, குலசேகரன் தெரு, காசியப்பன் தெரு, சுந்தரம் காலணி பகுதி, ராஜகீழ்ப்பாக்கம் மகாலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பதிவு அலுவலகம், சபை ரோடு, மாருதி நகர் 2-வது மெயின் சாலை, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலைஅடிகள் தெரு மற்றும் அவ்வை தெரு, கிஷ்கிந்தா மெயின் சாலை, கன்னடபாளையம், வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர், ஆர்கே நகர், அன்னை இந்திரா நகர், கடப்பேரி திருநீர்மலை சாலை, சுந்தரம் காலனி, ரமேஷ் நகர், சிங்காரவே, பிள்ளையார் தெரு மாடம்பாக்கம், படுவேஞ்சேரி பகுதி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், மாடம்பாக்கம் பகுதி ராதா நகர், பரசுவநாத் அவென்யூ, ஏ.எஸ்.கே. நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஷ்வந்த் நகர், பெரிய கைலேஷ் நகர், பாக்ய லட்சுமி நகர், பத்மாவதி நகர், ஆண்டாள் நகர், புவனேஸ்வரி நகர் 3 முதல் 4 வது மெயின் ரோடு, பார்வதி நகர் தெற்கு, பத்மாவதி நகர் விரிவு, மாடம்பாக்கம் மெயின் ரோட்டின் ஒரு பகுதி.

    அடையாறு: 1வது பிரதான சாலை, காந்தி நகர், கிருஷ்ணமாச்சாரி சாலை, சர்தார் படேல் சாலை.

    சோழிங்கநல்லூர் பிரிவு: மேடவாக்கம் பெரும்பாக்கம் மெயின் ரோடு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், குமரன் தியேட்டர், கௌரிவாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, சந்தோஷபுரம், வேளச்சேரி, புளச்சேரி மெயின்டிங் சாலை நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜயநகரம் இரண்டாவது மெயின் ரோடு, பார்க் தெரு 1,2,3, அன்பு நகர் 1,2, கோவிலம்பாக்கம் வடக்குப்பட்டு, தர்மபூபதி நகர், நவீன், சத்யா நகர், சுபிக்ஷா அவென்யூ, பள்ளிக்கரணை காமகோடி நகர், லேபர் காலனி, சாய் பாலாஜி நகர், பவானி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு.

    • சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும்.
    • தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 777 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைக்கும் போது, கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி பல கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இது குறித்து பொதுமக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதேபோல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கடை வந்த பிறகு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த கடைகள் மீது புகார்கள் வந்தால் அதனை கலெக்டர் பரிசீலனை செய்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    • வீடியோவை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அறிவிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    இது பழைய வீடியோ. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரெயில்கள் ரத்து.
    • 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.

    சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ரெயில்வே பணிகள் நடைபெறுவதால் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.

    கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படு இருக்கிறது. 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.

    • பல்லடம் அருகே கன்டெய்னர் லாரி சாலையில் நின்றவர்கள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    அவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பல்லடத்தில் கன்டெய்னர் விழுந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பல்லடம் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    ×