என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம்
- ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது.
கடந்த 2014-2016 வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றியிருந்தார்.
கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவரது தலைமையிலான குழு கீழடியில் ஆய்வு செய்தபோது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூருவில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் மத்திய தொல்லியல் துறை வழங்கியது.
அசாமில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவிட்டது.
இந்தநிலையில், மீண்டும் கீழடி அகழாய்வு பணியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது. கீழடி தொடர்பாக 982 பக்க அகழாய்வு அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த நிலையில், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக தற்போது உள்ளார்.






