என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் - தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தல்
- தே.மு.தி.க. தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்.
- நமக்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொகுதி வாரியாக நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளரிடம் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்:
* கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. நம்மை மதிக்கவில்லை.
* கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வினர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
* தே.மு.தி.க. தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்.
* நிர்வாகிகளுக்கு செலவுக்கு பணம் போதுமானதாக இல்லை. தலைமைக்கழகத்தில் இருந்து பணம் கொடுத்தால் பேருதவியாக இருக்கும்.
* 6 மாதத்திற்கு ஒருமுறை பல்வேறு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
* நமக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளை பலப்படுத்தி, கூட்டணியின்போது தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்.
* குறிப்பாக இந்த முறை நாம் எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்.
* நமக்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.






