என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நில மோசடி வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு- சிறப்பு நீதிமன்றம்
- மேயராக இருந்தபோது மற்றொருவருக்கு ஒதுக்கிய நிலத்தை மனைவி பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு.
- இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை 24-ல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் என சென்னை சிறப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.
இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.






