என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதன்படி, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது.
    • பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் இன்றுடன் (20.07.2025) முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் இன்றுடன் (20.07.2025) முடிவடைகிறது.

    இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.

    இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது."

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள்
    • 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா, 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், "நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம். கொள்கை முரண் என்பது வேறு, பாசம் என்பது வேறு... பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள். அமெரிக்காவுக்கு அண்ணா செல்லும்போது நிக்சனை சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர் சந்திக்கவில்லை. அதன்பின்பு நிக்சன் இந்தியா வரும்போது காமராசரை சந்திக்க விரும்புகிறார்கள். அப்போது அண்ணாதுரையை சந்திக்க விரும்பாத நிக்சனை நான் ஏன் சந்திக்க வேண்டும்? என்று காமராசர் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், காமராசர் 1975 ஆம் ஆண்டில் தான் உயிரிழந்தார். ஆனால் அண்ணா 1969 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டார். 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    • முக முத்துவின் மறைவையொட்டி முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்.
    • நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம்.

    அதிமுகவிற்கு பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்று கேட்கிறீர்கள்.

    இன்னும் 10 மாதங்கள் உள்ளது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ராணுவத்திற்கு ரகசியம் உள்ளதை போல எல்லாவற்றிற்கும் ஒரு ரகசியம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
    • நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்த அவர்,"

    அரசியலுக்கு அப்பால் இதுபோன்ற தருணங்களில் நடந்து கொள்வதுதான் நாகரிகம்.

    கட்சி முரண்பாடுகளை கடந்து இத்தகைய தருணங்களில் தலைவர்கள் நடந்து கொள்வது இயல்புதான்.

    நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம்" என்றார்.

    • இமாலய வெற்றிப் பயணமாக்கியதில் முழு பங்கும் தமிழக மக்களாகிய உங்கள் அனைவரையுமே சாரும்.
    • 31 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 12.5 லட்சம் மக்களை சந்தித்திருக்கிறேன்.

    "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்கும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்கிற எனது முதற்கட்ட

    புரட்சிப் பயணத்தை, மக்கள் எழுச்சிப் பயணமாக மாற்றி, அதை இமாலய வெற்றிப் பயணமாக்கியதில் முழு பங்கும்

    தமிழக மக்களாகிய உங்கள் அனைவரையுமே சாரும்.

    உங்கள் அனைவருக்குமே தெரியும், எனது முதற்கட்டமான இந்த எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆரம்பித்து, நேற்று 19.7.2025 அன்று திருவாரூர் மாவட்டம்,

    திருத்துறைப்பூண்டி வரை பிரச்சாரப் பயணத்தை தொடர்ந்து வருகிறேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர்,

    அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 31 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 12.5 லட்சம் மக்களை சந்தித்திருக்கிறேன்.

    நான் சென்ற இடங்களிலெல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறுகுறு தொழில் முனைவோர், மருத்துவர்கள்,

    பாட்டாளி வர்க்கத்தினர், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என்று அனைவருமே, 52 மாதகால மக்கள் விரோத ஸ்டாலின் குயடைரசந ஆடினநட மாடல் ஆட்சியில், அவர்கள் சந்தித்து வந்த வேதனைகளை எடுத்துரைத்தனர்.

    இவர்கள் எல்லோரும், "நீங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை, உங்களைச் சந்தித்ததில் ஆறுதல் அடைகிறோம். எங்கள் வேதனைகளுக்கு எல்லாம் விடிவுகாலம் வந்துவிட்டது" என தங்களின் வலிகளை மறைத்துக்கொண்டு, உளமார வரவேற்று என்னை அன்பில் நெகிழச் செய்தார்கள். மக்களின் ஆற்றல்மிக்க ஆதரவில் மூழ்கிப்போனேன்.

    குறிப்பாக விழுப்புரத்தில் ஒரு தாய் தழுதழுத்த குரலில் -

    ``அண்ணா, நீங்க மீண்டும் எப்ப முதல்வரா வருவீங்க?'' என கூட்டத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கேட்டபோது, 2026-இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே உணர்ந்தேன்.

    'பொன்மனச் செம்மல்', புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தோற்றுவித்த, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வளர்த்த 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்கிற மாபெரும் ஜனநாயக இயக்கம், தமிழ் நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் ரத்தவோட்டமாகக் கலந்திருப்பதை மீண்டும் ஒருமுறை அனுபவப்பூர்வமாகக் கண்டு மகிழ்ந்தேன்.

    "மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்கிற இந்த எழுச்சிப் பயணம் எனக்கும், என்னைப் போன்ற கோடிக்கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ரத்தத்தின் ரத்தங்களுக்கும் உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான்.

    அது என்னவென்றால் :-

    *ஆட்சிக்கு வந்த இந்த 52 மாதங்களில் மக்கள் விரோத ஸ்டாலின் குயடைரசந ஆடினநட ஆட்சி, பல பொய்களை மட்டுமே கூறி மக்களை மடைமாற்றம் செய்து, வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது.

    * `உங்களுடன் நான் - எங்களுடன் நீங்கள்' என்றெல்லாம் வெற்று விளம்பரங்கள் மட்டுமே செய்து, இந்த மக்கள் விரோத ஸ்டாலின் குயடைரசந ஆடினநட ஆட்சி, தன்னுடைய பித்தலாட்டத்தை தொடர்கிறது.

    * தங்களின் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நலத்தை தள்ளிவைத்துவிட்டு, தமிழ் நாட்டைக் கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது அமைச்சரவை சகாக்களும்.

    * நகராட்சி சொத்துக்களை கொள்ளையடிக்கும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மு.சூ. நேரு அவர்கள்,

    நமது எழுச்சிப் பயணத்தை தவறாக சித்தரித்து - சம்மந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தைக் காப்போம், மக்களை மறப்போம், தமிழ் நாட்டை விற்போம், மகனைக் காப்போம், என என்மீது அவதூறு பரப்பி

    இருக்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், 'மந்தி தனது குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்' என்ற பழமொழிக்கு ஏற்றார்போல், ஸ்டாலின் அவர்கள், அமைச்சர் நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில்

    ஆழம் பார்த்திருக்கிறார்.

    அதாவது, நேருவின் ஆழ்மனதில் ஸ்டாலினைப் பற்றி உள்ள - 'மருமகனைக் காப்போம் - மகனைக் காப்போம்,

    ரியல் எஸ்டேட் மூலமாக தமிழ் நாட்டை கூறுபோட்டு விற்போம்,

    மக்களை மறப்போம், போதைப் பழக்கத்தை பரப்புவோம், இயற்கை வளங்களை சுரண்டுவோம், பல்லாயிரம் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்போம், சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து,

    ஊழல் பணத்தை தமிழ் நாட்டிற்கு கொண்டு வருவோம்' என்ற அவர்களின் எண்ணத்தைக் கூறும் விதமாகவே அமைச்சர் நேருவின் பேச்சு உள்ளது.

    பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே!

    உங்கள் பொய்யான வாக்குறுதிகளையும், திறனற்ற ஆட்சியையும் கண்டு, உண்மை முகத்தை அறிந்து உங்கள் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் அனைவரும் உறுதி ஏற்றுவிட்டார்கள்.

    தமிழக மக்களின் உள்ளம் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது. அவர்கள் அடைந்திருக்கும் தாழ்வைப்

    போக்க சபதமேற்றுவிட்டது.

    `மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்` என்கிற என்னுடைய முதற்கட்ட எழுச்சிப் பயணத்தின் மூலம், நான் உணர்ந்ததை, உங்கள் தோல்வி மாடல் அரசுக்கு ஒரு குறள் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இயற்றலும் &டவ;ட்டலுங் காத்தலும் காத்த

    வகுத்தலும் வல்ல தரசு.

    இவற்றை எல்லாம் நீங்கள் தமிழகத்துக்குச் செய்யவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் குற்றச்சாட்டு!

    நீங்கள் என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும். மக்கள் ஆதரவு இன்னும் பெருகும். 2026-இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று, அனைத்து மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நல் ஆட்சியை வழங்குவோம். தவறு செய்த தற்போதைய

    ஆட்சியாளர்கள் அனைவரும் அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

    மக்களைக் காப்போம்!

    தமிழகத்தை மீட்போம்!

    மக்கள் விரோத ஸ்டாலின் குயடைரசந ஆடினநட ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2026-இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே உணர்ந்தேன்.
    • தமிழ் நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் ரத்தவோட்டமாகக் கலந்திருப்பதை மீண்டும் ஒருமுறை அனுபவப்பூர்வமாகக் கண்டு மகிழ்ந்தேன்.

    என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தை அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில்," சம்மந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தை காப்போம், தமிழகத்தை விற்று மகனை காப்போம் என என் மீது கே.என்.நேரு அவதூறு பரப்புகிறார்.

    மந்தி தனது குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதுபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கே.என்.நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் ஆழம் பார்க்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மருமகனை, மகனை காப்போம் ரியல் எஸ்டேட் மூலம் தமிழகத்தை விற்போம் என்ற ஸ்டாலின் எண்ணத்தை கூறும் விதத்தில் நேரு பேசியிருக்கிறார்.

    2026ல் அதிமுக வெற்றி பெற்று நல்லாட்சி தரும்போது, தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்றார்.


    • கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.
    • விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது. அதன்படி, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.

    சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார். சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.தி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

    முழுமையான ஒழுங்குநடவடிக்கைகுழுமுன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆதராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    விசாரணைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    22-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 22-07-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று வந்த ஒரு மர்ம இ-மெயில் தகவலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு சோதனையும் அதிகரிக்கப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.

    இந்த பரிசோதனைகள் காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஹாங்காங், பிராங்க் பார்ட், குவைத், துபாய், சார்ஜா, தோகா, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.

    • உடுமலை பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கார் சிலைகளை திறந்து வைகிறார்.
    • 23-ந்தேதி மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22 மற்றும் 23-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை திறந்து வைக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 22-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக திருப்பூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    அதை தொடர்ந்து கோவில் வழி புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் மதிய ஓய்வுக்கு பிறகு மாலை திருப்பூரில் இருந்தும் புறப்பட்டு மடத்துக்குளம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நடைபெறும் ரோட் ஷோவிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

    22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு உடுமலையில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந்தேதி காலை உடுமலை பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கார் சிலைகளை திறந்து வைகிறார்.

    அதை தொடர்ந்து, நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதன் பிறகு கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் பொள்ளாச்சி வட்டம் பொதுப்பணித்துறை நீர்வள தலைமை பொறியாளர் அலுவலகத் தில் அமைக்கப்பட்டுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நடைபெற காரணமாக திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து, விவசாய மக்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக 1348 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 23-ந்தேதி மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

    • தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.
    • நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.

    சென்னை:

    2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தல் களத்தில் சந்திக்க உள்ளது.

    இது தவிர புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய் இந்த தேர்தலில் களம் இறங்குகிறார். அவர் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? அல்லது புதிய கூட்டணி அமைப்பாரா? இல்லை தனித்து போட்டியிடுவாரா? என்பதை இன்னும் அவர் தெளிவுப்படுத்தவில்லை.

    ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால் வெற்றி நிச்சயம். ஆட்சியை பிடித்து விடலாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டங்களில் பேசுகிற போது எங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரப்போகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று பேசி வருகிறார். அதுமட்டுமின்றி 234 தொகுதிகளில் 200 தொகுதிக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கூறி வருகிறார்.

    அதுமட்டுமின்றி அ.தி.மு.க. கூட்டணியில் சேர வரும் கட்சிகளை ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அழைப்பும் விடுத்துள்ளார். இதனால் அ.தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் எந்தெந்த கட்சிகள் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே இருப்பதால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் நிலவரங்கள் எப்படி இருக்கிறது? மக்களின் மனநிலை என்ன? என்பதை அறிய தனிநபர் ஏஜென்சிகள் மூலம் 'சர்வே' எடுத்து வருகின்றன.

    தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.

    தி.மு.க.வை பொறுத்த வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை மூலம் அவ்வப்போது நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி சபரீசனின் 'பென்டீம்' நிறுவனம் சட்டசபை தொகுதி வாரியாக சர்வே எடுத்து தெரிந்து கொள்கின்றன.

    அதே போல் நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் தனியாக ஒரு ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் நிலவரங்களை அறிந்து கொள்கிறார்.

    அந்த ஏஜென்சி 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்தல் நிலவரங்களை கணித்து கொடுத்து வருகிறது. அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும். தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதி கிடைக்கும். விஜய் தனித்து நின்றால் அது யாருக்கு சாதகமாக அமையும் என்றெல்லாம் தனித்தனியாக புள்ளி விவரத்துடன் சர்வே கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி அரசியலில் காய் நகர்த்தி வருகிறார்.

    ×