என் மலர்
சென்னை
- கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சிகள் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தன.
- மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு அவரது முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்து பேசினார். சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அவரது வாகன அணிவகுப்பு புறப்பட்ட சிறிது நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது காரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன அணிவகுப்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது. அங்கு அவருக்கு டாக் டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மருத்துவமனைக்கு சென்றனர்.
இதற்கிடையே கொளத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துமாறு அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
- ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
- கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
* ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார்.
* அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை. இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை.
* தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை. இம்முறை 15% கூடுதல் வாக்குகள் பெற்று தி.மு.க. வெல்லும்.
* கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.
- முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார்.
இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* மாண்புமிகு தளபதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன்.
* கருத்தியல் ரீதியாக அ.தி.மு.க. தடம் புரண்டு விட்டது.
* தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது அ.தி.மு.க.
* முதலமைச்சர் வேட்பாளர் என இ.பி.எஸ். பெயரை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை.
* அ.தி.மு.க.வை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.
* 3 முறை கூட்டணி குறித்து பேட்டியளித்த அமித்ஷா முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கூறவில்லை.
* எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பா.ஜ.க.வின் வேலை.
* கூட்டணி ஆட்சி என அமித்ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இ.பி.எஸ்.ஆல் கூற முடியவில்லை.
* பலமுறை என் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அடுத்த சாய்ஸ் தி.மு.க.தான், அதனால் இணைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்வர்ராஜா. அ.தி.மு.க.வில் சிறுபான்மை இன தலைவர்களில் இவர் முக்கிய பங்கு வகித்து இருந்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் பதவியையும் ஜெயலலிதா வழங்கி இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அவர் சசிகலாவின் ஆதரவாளராக மாறினார்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும் சசிகலாவிடம் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவில் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.
இந்த நிலையில் அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
2023-ம் ஆண்டு அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து அவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் மீண்டும் கூட் டணி அமைக்கப்பட்டது. அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த கூட்டணியை முன்னெடுத்து செல்கிறார்கள்.
பாஜகவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்தது அன்வர் ராஜாவுக்கு அதிருப்தியை கொடுத்தது. இது தொடர்பாக அவர் தனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அன்வர் ராஜா தி.மு.க.வில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்காக அவர் தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அன்வர்ராஜா அ.தி.மு.க. வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.
இதற்கிடையே அன்வர் ராஜா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
- நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,180 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880
17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-07-2025- ஒரு கிராம் ரூ.126
19-07-2025- ஒரு கிராம் ரூ.126
18-07-2025- ஒரு கிராம் ரூ.125
17-07-2025- ஒரு கிராம் ரூ.124
16-07-2025- ஒரு கிராம் ரூ.124
- அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
- தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
- தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார்.
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.
- ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அதனை எடுக்குமாறு ஓட்டுனர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் அவ்வப்போது திடீர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த முறை அரியலூர் அருகே ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அடுத்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அதனை எடுக்குமாறு ஓட்டுனர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
- பிரிவினையை விதைத்து ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே உறுதியாக நிற்கிறார்.
- மல்லிகார்ஜுன கார்கே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிரிவினையை விதைத்து ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே உறுதியாக நிற்கிறார். பிரிவினை சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்று இந்தியா கூட்டணியை மல்லிகார்ஜுன கார்கே வலுப்படுத்துகிறார்.
மல்லிகார்ஜுன கார்கே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதன்படி, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது.
- பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் இன்றுடன் (20.07.2025) முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் இன்றுடன் (20.07.2025) முடிவடைகிறது.
இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது."
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள்
- 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா, 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், "நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம். கொள்கை முரண் என்பது வேறு, பாசம் என்பது வேறு... பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள். அமெரிக்காவுக்கு அண்ணா செல்லும்போது நிக்சனை சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர் சந்திக்கவில்லை. அதன்பின்பு நிக்சன் இந்தியா வரும்போது காமராசரை சந்திக்க விரும்புகிறார்கள். அப்போது அண்ணாதுரையை சந்திக்க விரும்பாத நிக்சனை நான் ஏன் சந்திக்க வேண்டும்? என்று காமராசர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், காமராசர் 1975 ஆம் ஆண்டில் தான் உயிரிழந்தார். ஆனால் அண்ணா 1969 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டார். 1969 ஆண்டில் உயிரிழந்த அண்ணா 1975 இல் மறைந்த காமராசருக்காக எப்படி அழுதிருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.






