என் மலர்
சென்னை
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- சர்தார் படேல் ரோடு, தரமணி, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4 -வது தெரு வரை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தரமணி: வி.எச்.எஸ். மருத்துவமனை, சர்தார் படேல் ரோடு, தரமணி, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4 -வது தெரு வரை, பள்ளிபேட்டை, ஸ்ரீராம்நகர் மெயின் ரோடு மற்றும் காலனி, பள்ளிபேட்டை மெயின் ரோடு, பஜனை கோவில் தெரு, யோகி தோட்டம், புதிய தெரு, கந்தசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சிறுசேரி: சிறுசேரி சிப்காட் நவலூர், தாழம்பூர் பகுதி, சிறுசேரி மற்றம் காரணை கிராமம், ஏகாட்டூர், ஓஎம்ஆர் நாவலூர், படுபாக்கம், எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சாந்தியா கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 25-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்.
- முதலமைச்சருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ அறிக்கையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
- அச்சுதானந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான அச்சசுதானந்தன் அவர்கள் வயது மூப்பு மற்றும் முதுமை காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர். அண்மையில் நூறாவது பிறந்தநாளை கொண்டாடிய அச்சுதானந்தன் அவர்கள் பொதுவாழ்வில் ஏராளமான அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்.
முதலமைச்சர் உள்ளிட்ட பெரும் பதவிகளை வகித்த போதும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். அவரது அரசியல் வாழ்க்கை பொதுவாழ்க்கைக்கு வந்துள்ள இன்றைய இளம் தலைமுறைகளுக்கு பெரும்பாடம்.
அச்சுதானந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பொதுவுடமை இயக்கத்தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், " கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். பல போராட்டங்களைச் சந்தித்து அரசியலில் தனது முத்திரையைப் பதித்தவர். தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சுமார் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார்.
1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1980 முதல் 1992 வரை சி.பி.எம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல்2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்.
கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவர். அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறை ஆகியவை அவரை கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
- விபத்தில் படுகாயமைடைந்த மூன்று பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ளஆண்டியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்விடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமைடைந்த மூன்று பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (21.07.2025) பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கீழத்திருத்தங்கல், முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த திரு.கார்த்திக் (வயது 23) த/பெ.தங்கராஜ் மற்றும் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி (வயது 55), மாரியம்மாள் (வயது 53), மற்றும் மாரியம்மாள் (வயது 50) ஆகிய மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.
- போதிய ஓய்வுக்குப் பிறகுதான் இரவுப் பணி வழங்கப்படுவதால், இரவுப் பணியில் ஓய்வு எடுக்கக் கூடாது.
சென்னையில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை மாநகரக் காவல்துறை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் வாகனத் தணிக்கை நடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து வாகன போலீசார், போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர போலீசார்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும் பைக் ரேஸ் நடக்கக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிப்போரை, அடுத்த செக்பாயிண்டில் தகவல் தெரிவித்து பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.
அவசர அழைப்புகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். எதுவும் நடக்கவில்லை என்று மழுப்பல் பதில் கூறக் கூடாது. புகார்தாரர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி முடிக்காமல், சம்பவ இடத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும்.
அதிகாலை 2 - 4 மணிக்கு வங்கிகள், ஏ.டி.எம்.களில் உள்ள காவலர்கள் தூங்கிவிடுவார்கள் என்பதால், அவர்களை அலெர்ட் செய்ய வேண்டும். இரவுப் பணியில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் காவலன் செயலியில் பதிவேற்ற வேண்டும்.
ஒவ்வொரு ஏரியாக்களிலும் 2 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும். 2 பேர் தங்கும் அறையில் கூடுதல் நபர்கள் தங்கியிருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.
போதிய ஓய்வுக்குப் பிறகுதான் இரவுப் பணி வழங்கப்படுவதால், இரவுப் பணியில் ஓய்வு எடுக்கக் கூடாது.
இரவு நேரத்தில் எந்த காவல் நிலையத்திலும் குற்றவாளிகளை வைத்திருக்கக் கூடாது. வாகன தணிக்கையைப் பார்த்து யாரும் வேகமாக வாகனங்களை இயக்கி தப்பிச் செல்வோரை விரட்டிப் பிடிக்காமல், அடுத்த செக்பாயிண்ட்க்கு தகவல் அளித்து அவர்களைப் பிடிக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அச்சுதானந்தன் ஒரு உண்மையான மகத்தான தலைவர்.
- தோழர் அச்சுதானந்தன் கேரளாவின் அரசியல் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகர மரபை விட்டுச் செல்கிறார்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அச்சுதானந்தன் ஒரு உண்மையான மகத்தான தலைவர். தோழர் அச்சுதானந்தன் கேரளாவின் அரசியல் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகர மரபை விட்டுச் செல்கிறார்.
அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு உண்மையான மகத்தான தலைவரின் இழப்பால் துக்கப்படும் கேரள மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.
எனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் மகத்தான தலைவருக்கு, அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார்.
ரெட் சல்யூட்
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதி.
- தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு அவரது முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்து பேசினார். சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அவரது வாகன அணிவகுப்பு புறப்பட்ட சிறிது நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது காரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன அணிவகுப்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது. அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராம், ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டது.
- அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா சென்னைக்கு மாற்றப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஆர். ஸ்ரீராம். இவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்
இந்த நிலையில் எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சிகள் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தன.
- மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு அவரது முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்து பேசினார். சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அவரது வாகன அணிவகுப்பு புறப்பட்ட சிறிது நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது காரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன அணிவகுப்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது. அங்கு அவருக்கு டாக் டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மருத்துவமனைக்கு சென்றனர்.
இதற்கிடையே கொளத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துமாறு அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
- ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
- கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
* ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார்.
* அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை. இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை.
* தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை. இம்முறை 15% கூடுதல் வாக்குகள் பெற்று தி.மு.க. வெல்லும்.
* கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.






