என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்: அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை- அன்வர் ராஜா
- ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
- கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.
* ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார்.
* அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை. இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை.
* தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை. இம்முறை 15% கூடுதல் வாக்குகள் பெற்று தி.மு.க. வெல்லும்.
* கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






