என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா முதல்வர்"
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
- அச்சுதானந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான அச்சசுதானந்தன் அவர்கள் வயது மூப்பு மற்றும் முதுமை காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர். அண்மையில் நூறாவது பிறந்தநாளை கொண்டாடிய அச்சுதானந்தன் அவர்கள் பொதுவாழ்வில் ஏராளமான அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்.
முதலமைச்சர் உள்ளிட்ட பெரும் பதவிகளை வகித்த போதும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். அவரது அரசியல் வாழ்க்கை பொதுவாழ்க்கைக்கு வந்துள்ள இன்றைய இளம் தலைமுறைகளுக்கு பெரும்பாடம்.
அச்சுதானந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பொதுவுடமை இயக்கத்தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், " கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். பல போராட்டங்களைச் சந்தித்து அரசியலில் தனது முத்திரையைப் பதித்தவர். தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சுமார் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார்.
1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1980 முதல் 1992 வரை சி.பி.எம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல்2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்.
கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவர். அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறை ஆகியவை அவரை கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- கேரளா முதல்வர் பினராயி விஜயன் கான்வாய் விபத்தில் சிக்கியது.
- ஸ்கூட்டர் திடீரென நின்றதால் விபத்து ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தை அடுத்த வாமனபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் விபத்தில் சிக்கியது. அவரது கான்வாய் வாகனங்களுக்கு முன்பு சென்ற ஸ்கூட்டர் திடீரென குறுக்கே சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கான்வாயில் ஐந்து வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
கான்வாய் வாகனங்கள் முன்பு சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரை தவிர்க்க முற்பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. முதலமைச்சரின் வாகனம் சிறிதளவு சேதம் அடைந்தாலும், முதல்வர் காயமின்றி தப்பித்தார். இதனால் சிறிது நேரம் அவரது பயணம் தடைப்பட்டது. அதன்பிறகு முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.






