கேரள முதல்வர் கான்வாய் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

கேரளா முதல்வர் பினராயி விஜயன் கான்வாய் விபத்தில் சிக்கியது.ஸ்கூட்டர் திடீரென நின்றதால் விபத்து ஏற்பட்டது.
கேரள முதல்வர் கான்வாய் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
Published on

திருவனந்தபுரத்தை அடுத்த வாமனபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் விபத்தில் சிக்கியது. அவரது கான்வாய் வாகனங்களுக்கு முன்பு சென்ற ஸ்கூட்டர் திடீரென குறுக்கே சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கான்வாயில் ஐந்து வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.

கான்வாய் வாகனங்கள் முன்பு சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரை தவிர்க்க முற்பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. முதலமைச்சரின் வாகனம் சிறிதளவு சேதம் அடைந்தாலும், முதல்வர் காயமின்றி தப்பித்தார். இதனால் சிறிது நேரம் அவரது பயணம் தடைப்பட்டது. அதன்பிறகு முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com