என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

என்ன மடைமாற்றினாலும் எனது எழுச்சிப் பயணம் தொடரும்- எடப்பாடி பழனிசாமி
- 2026-இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே உணர்ந்தேன்.
- தமிழ் நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் ரத்தவோட்டமாகக் கலந்திருப்பதை மீண்டும் ஒருமுறை அனுபவப்பூர்வமாகக் கண்டு மகிழ்ந்தேன்.
என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தை அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில்," சம்மந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தை காப்போம், தமிழகத்தை விற்று மகனை காப்போம் என என் மீது கே.என்.நேரு அவதூறு பரப்புகிறார்.
மந்தி தனது குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதுபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கே.என்.நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் ஆழம் பார்க்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மருமகனை, மகனை காப்போம் ரியல் எஸ்டேட் மூலம் தமிழகத்தை விற்போம் என்ற ஸ்டாலின் எண்ணத்தை கூறும் விதத்தில் நேரு பேசியிருக்கிறார்.
2026ல் அதிமுக வெற்றி பெற்று நல்லாட்சி தரும்போது, தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்றார்.






