என் மலர்tooltip icon

    சென்னை

    • 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    • மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம் அமைய வழிவகுக்கும்.
    • நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்.

    இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம் அமைய வழிவகுக்கும்.

    மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    இத்திருநாளில் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • சுதந்திர தினத்தில் ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம்.
    • ஜனநாயகத்தை திருட முடியாத நாட்டை கட்டமைக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சுதந்திர தினத்தில் ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம்.

    உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.

    உண்மையான சுதந்திரம் என்பது ஓரங்கட்டப்பட்டவர்களை பாதுகாத்தல், சுதந்திர போராளிகளின் லட்சியத்தை நிலைநிறுத்துவதாகும்.

    ஜனநாயகத்தை திருட முடியாத நாட்டை கட்டமைக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
    • டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.

    79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டார்.

    அதில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில், ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே..

    ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, "நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்" என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.

    எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது.

    கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி "தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?" என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார். 

    • மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே வெளியேறுகின்றனர்.
    • ஏழ்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

    79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது.

    தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன்தான் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறது. கஞ்சா உள்ளிட்ட ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    அரசுப் பள்ளிகளில் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே உள்ளனர்.

    ஏழ்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் பிறருக்கும் இடையேயான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது.

    சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளான பிறகும், பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல்ரீதியாகத் தாக்கப்படும் பாகுபாடு நிலவுகிறது நாம் அவமானப்பட வேண்டியது.

    இளைஞர்களிடையே தற்கொலை விகிதங்கள் தேசிய சராசரியை விட தமிழகத்தில் அதிகரித்துள்ளது. 

    தமிழ் மொழியும் கலாசார மரபும் தேசத்தின் பெருமை. தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ்க் கலாசாரத்தின் மிகப்பெரும் அபிமானி நமது பிரதமர் மோடிதான்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை சீமான் நேரில் சந்தித்தார்.
    • அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் கைது செய்பட்டு வேளச்சேரி திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர்.

    மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வுசெய்தது மக்களின் தவறு. ஆட்சியாளர்களை குறை சொல்ல நமக்கு தகுதி இல்லை. ஏனெனில் அஆட்சியை நிறுவியதே நாம்தான்.

    அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது. இன்றைக்கு அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சத்திற்கு காப்பீடு உள்ளிட்டவை கொடுப்போம் என்கிறது.

    தூய்மைப்பணி தனியாரிடம் செல்லும்போது அரசு ஏன் இதெல்லாம் வழங்குகிறது? அனைத்தும் கொடுக்கும் அரசு, நிரந்தர வேலையையும் கொடுக்கலாமே.

    பணியில் எடுக்கும்போதே அரசுப்பணி என்று சொல்லித்தானே எடுத்தார்கள். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா. தனியார் முதலாளிகளின் பொறுப்பா" என்று கேள்வி எழுப்பினார்.   

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
    • இந்தியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 40 காத்தாடி கலைஞர்கள், 100க்கும் மேற்பட்ட காத்தாடிகளை தற்போது பறக்க விட்டுள்ளனர்.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 4-வது சர்வதேச காத்தாடி திருவிழா கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று துவங்கியது. வரும் 17வரை நடைபெறுகிறது.

    சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

    இதில் புலி, பூனை, மான், கரடி போன்ற வனவிலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், அலாவுதீன், ஜல்லிக்கட்டு காளை, கடல்வாழ் உயிரினங்கள் என, பல்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில், கடற்கரை காற்றில், நீலவான பின்னணியில் வானில் பறந்து பார்வையாளர் அனைவரையும் கவர்ந்தது.

    இந்தியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 40 காத்தாடி கலைஞர்கள், 100க்கும் மேற்பட்ட காத்தாடிகளை தற்போது பறக்க விட்டுள்ளனர்.

    நுழைவு கட்டணம் ஆன்-லைன் வழியில் வாங்கினால் ரூ.200, நேரில் வந்து வாங்கினால் ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    12வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி. வளாகம் உள்ளே நடைபெறும் கலை நிகழ்ச்சிகளின் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது.

    எம்.எல்.ஏக்கள் பாலாஜி, வரலட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், பையணூர் சேகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • ஆளுநர் ரவி மாலை ராஜ் பவனில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.
    • முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கட்சிகள் ஏற்கனவே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ரவி நாளை மாலை ராஜ் பவனில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.

    இதற்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்ட்டது.

    இந்நிலையில் ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழர் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி விருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கட்சிகள் ஏற்கனவே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
    • 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே அறிவிப்பு .

    நாளை (வெள்ளிக்கிழமை) சுதநதிர தினம் என்பதால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சிறப்பு ரெயில் இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
    • தென் மாவட்டங்கள் செல்வோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) சுதநதிர தினம் என்பதால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

    தொடர் விடுமுறைக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்வோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கம் நடப்பதால் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதுள்ளது.

    ஆதலால் தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட மாற்று வழிகளையும் பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கப்படும்
    • தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

    4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

    * தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

    * தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

    * தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

    * தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

    * தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

    * பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

    * தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்

    முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!

    இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு!" என்று தெரிவித்துள்ளார்.

    • அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது.
    • முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தை பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த வக்கீல் எம்.சத்தியகுமார் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தை பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

    தனியார் தன்னார்வலர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் மக்களிடம் இருந்து பெறப்படும் மருத்துவ ரீதியான தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இது உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை நிரந்தரமாக அழிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இதே போன்ற கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.

    இதனையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    ×