என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுதந்திர தினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- சுதந்திர தினத்தில் ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம்.
- ஜனநாயகத்தை திருட முடியாத நாட்டை கட்டமைக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சுதந்திர தினத்தில் ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம்.
உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.
உண்மையான சுதந்திரம் என்பது ஓரங்கட்டப்பட்டவர்களை பாதுகாத்தல், சுதந்திர போராளிகளின் லட்சியத்தை நிலைநிறுத்துவதாகும்.
ஜனநாயகத்தை திருட முடியாத நாட்டை கட்டமைக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






