என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, வருகிற 29-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டிஎன்எச்பி, திருவேற்காடு மெயின் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு, திருவீதியம்மன் கோவில் தெரு.

    அயப்பாக்கம்: ஐசிஎப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டிஎன்எச்பி, திருவேற்காடு மெயின் ரோடு, அத்திப்பேட்டை, வானகரம் சாலை, கங்கை சாலை, பாரதி மெட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கேஎஸ்ஆர் நகர், விஜிஎன் சாந்தி நகர், மேல் அயனம்பாக்கம், சென்னை அயனம்பாக்கம் நகர், புதிய நகர், ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கரகாரம், தேவி நகர், சின்ன கொலடி, செல்லியம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.

    கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர், ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் ரோடு, நியூ காலனி, கற்பகாம்பாள் நகர், சீனிவாசபுரம், நஜீமா அவென்யூ, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், காவேரி நகர், பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், எச். மற்றும் முல்லை H70 முதல் H78 வரையிலான குடியிருப்புகள்.

    திருவேற்காடு: செஞ்சுரியன் அவென்யூ, ஆரோ எலியாஸ், வடநூம்பல், பெருமாள்கரம்.

    செம்பியம்: கிருஷ்ணமூர்த்தி சாலை, ஜிஎன்டி சாலை, ஏபி அரசு தெரு, அண்ணாசாலை, கண்ணபிரான் கோவில் தெரு, எத்திராஜ் சாலை, கேவிடி மருத்துவமனை, மூலக்கடை, சந்திரபிரபு காலனி, தணிகாசலம் நகர், அன்னை சத்யா நகர், வெங்கடேஷ்வரா நகர், போலீஸ் குடியிருப்பு, முத்தமிழ் நகர் 5 முதல் 6வது பிளாக் வரை, பாலாஜி தெரு, எமரால்டு தெரு, சில்வர் தெரு, கெனால் ரோடு.

    • இரண்டு நாள் தங்கம் விலை உயர்வுக்கு டிரம்பின் விசா அறிவிப்பு முக்கிய காரணம்
    • டிரம்ப் அறிவிப்பு உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

    தங்கம் விலை இன்னும் உயர காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். இதற்கு முன்பாக பல காரணங்கள் இருந்தாலும், திடீரென இந்த இரண்டு நாள் விலை ஏற்றத்திற்கு (நேற்றும் இன்றும் சவரனுக்கு 2240 ரூபாய் உயர்ந்துள்ளது) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் விசா குறித்த அறிவிப்புதான் காரணம்.

    இது உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

    • வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரிததுறை உத்தரவு.
    • 2019-ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022-ல் பிறப்பித்துள்ளதால் ரத்து செய்ய வேண்டும் என வழக்கு.

    வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரிததுறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    2019-ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022-ல் பிறப்பித்துள்ளதால் ரத்து செய்ய வேண்டும் என விஜய் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    வருமான வரிச் சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோன்ற வழக்கில் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

    • கடந்த 9 மாதங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.21 ஆயிரம் அதிகரித்தது.
    • தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும்

    சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-ம், சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் 2 ஆவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.85,120 ஆக விற்பனையாகிறது.

    காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1120 அதிகரித்துள்ளது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

    18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு கிராம் ரூ.148

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    19-09-2025- ஒரு கிராம் ரூ.143

    18-09-2025- ஒரு கிராம் ரூ.141

    • இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08:30 மணி அளவில் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் நிலவி, பின்பு வலுகுறையக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி கரையை கடக்கக்கூடும்.

    இதனிடையே தமிழகத்தில் இன்று முதல் 25-ந்தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதற்கிடையே இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் 24- ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • காலாண்டு தேர்வுகள் வருகிற 26-ந்தேதியுடன் முடிய உள்ளன.
    • ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் வருகிற 26-ந்தேதியுடன் முடிய உள்ளன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந்தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து அவர் கூறும்போது, இந்த கல்வியாண்டில் 2-ம் பருவம் அக்டோபர் 6-ந்தேதி அன்று தொடங்க உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்று 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60 ஆயிரத்து 960 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 5 ஆயிரத்து 211 மாணவர்களும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 749 மாணவர்களும் பயன் பெறுவார்கள் என்றார்.

    • அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அந்த பந்தயங்களின் அட்டவணை விவரம் வருமாறு:

    செப்டம்பர் 27–28: க்ரெவென்டிக் 24H

    செப்டம்பர் 30– அக்டோபர் 1: LMP3 சோதனை

    அக்டோபர் 6: மஹிந்திரா பார்முலா E சோதனை:

    அக்டோபர் 11–12: GT4 ஐரோப்பிய தொடர்

    என மொத்தம் 4 கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் என அஜித்குமார் ரேசிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • பாராளுமன்றம் கூடும் நாட்கள் தவிர வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்.
    • 15 நாட்களுக்கு ஒருமுறை தொகுதியில் தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.பி.க்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில்,

    * பாராளுமன்றம் கூடும் நாட்கள் தவிர வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்.

    * மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * 15 நாட்களுக்கு ஒருமுறை தொகுதியில் தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    * தங்கள் தொகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும். முகாம்களில் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    * தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * சட்டசபை தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
    • எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    சென்னை :

    சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அக்டோபர் மாதம் 14-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். அன்றைய தினம் 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

    எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். 

    • ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மாதவரம் - சிப்காட், பூந்தமல்லி - லைட் ஹவுஸ், மற்றும் மாதவரம் - மணப்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்நிலையில் பூவிருந்தவல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.

    மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் வரும் 2027 மார்ச் மாதத்தில் இயக்கப்படும்.

    வரும் 2026 ஜூனில் போரூர் - கோடம்பாக்கம் இடையே, கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே ரெயில் சேவை இயக்கப்படும். மெட்ரோ ரெயில் பாதையின் 2-ம் கட்டப்பணிகள் இறுதி நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-ம், சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 149 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

    18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு கிராம் ரூ.148

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    19-09-2025- ஒரு கிராம் ரூ.143

    18-09-2025- ஒரு கிராம் ரூ.141

    ×