என் மலர்
அரியலூர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தே.மு.தி.க. கொடி நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.
முன்னதாக மாவட்ட தலைமைக்கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் கழக தொண்டரணி துணைச் செயலாளர் சாகுல்அமீது தே.மு.தி.க. கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனையடுத்து அரியலூர் 7,8-வது வார்டுகளிலும், அரியலூர் ஒன்றியம் காஞ்சி லிகொட்டாய், திருமானூர் ஒன்றியம் கோமான், குருவாடி, காமரசவல்லி, மாத்தூர், கீழவரப்பங்குறிச்சி, மாதா காலனி, ஏலாக்குறிச்சி, கீழ கொளத்தூர், சாத்தமங்கலம், முடிகொண்டான், திருமா னூர், குலமாணிக்கம், செம்பியக்குடி, கோவில் எசனை, ஆங்கியனூர்,
வெங்கனூர், வேட்டக்குடி, எரக்குடி, அயன்சுத்தமல்லி, மடத்தான்குளம், மேலப்பழூர், மல்லூர் ஆகிய ஊர்களில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைதலைவர் ஜோசப் சத்ய மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் தங்க ஜெயபாலன், அரியலூர் நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் மணிகண்டன்,
திருமானூர் கிழக்கு ராஜ்குமார், மேற்கு ஜெகதீசன், அரியலூர் ஒன்றிய பொருளா ளர் சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, கலிய மூர்த்தி, அரியலூர் மாவட்ட அணிச் செயலாளர்கள் நல்ல தம்பி, ராமச்சந்திரன், சகாதேவன், முன்னாள் மாவட்ட மாணவரணி தர்மராஜ், சதீஸ்குமார்,
அரியலூர் நகர நிர்வாகிகள் மதி, சேகர், சுந்தர், ராஜா, கண்ணன், சின்னமுருகன், மருது, சக்தி, திருமானூர் ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், ரெங்கராஜ், சாமிநாதன், விஜயலாரன்ஸ், பிரான்சிஸ் பாலகுமார், முத்துலிங்கம், பழனியப்பா, தெய்வநாதன், கருப்பையா, செந்தில்குமார் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். #tamilnews
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா நீட் தேர்வால் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி அனிதா நினைவாக நூலக அடிக்கல்நாட்டு விழா, அவரது சொந்த ஊரான, குழுமூர் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு குன்னம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம். எல்.ஏ. சிவசங்கர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கடைசி வரை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யப்படும் வரை தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து போராடும் என்றார்.
அவரை தொடர்ந்து குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசுகையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் இருந்து கடந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு பெற அ.தி.மு.க. அரசு கடுமையாக போராடியது.
உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரிலேயே நீட் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவிடாமல் தடுத்தார். எனவே தமிழகத்தில் நீட் வந்ததற்கு அ.தி.மு.க. அரசு காரணம் இல்லை.
அரசியல்வாதிகளின் போராட்டத்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஆகையால் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதனை கேட்ட அ.தி.மு.க.வினர் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய அவர் அனிதா இறந்தபோது என்னால் நேரில் வர இயலவில்லை. எனவே, அவரது நினைவு நூலக கட்டுமானப் பணிக்காக எனது சொந்த பணத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்குகிறேன் என்றார்.

அதேபோல, நீட் தேர்வால் இறந்த அனிதாவுக்கு, அவரது அண்ணணாக இருந்து எனது சொந்த செலவில் இந்த நூலகத்தை கட்டி முடிப்பேன். பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். வரும் தேர்தலிலாவது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசங்களுக்காக ஓட்டு போடாதீர்கள். யார் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார்.
ஒரே மேடையில் அ.தி.மு.க., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டது அரசியல் நாகரீகம் மாறியுள்ளதாகவும், மக்கள் பிரச்சனைகளுக்கும் இதே போன்று அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். #Tamilnews
அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 18). இவர் அரியலூர் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றிரவு ஜெயலட்சுமியும், அவரது தோழி கார்த்திகாவும் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக கொல்லாபுரத்தில் இருந்து அரியலூருக்கு மொபட்டில் சென்றனர். அப்போது வழியில் டாடா சுமோ காரில் வந்த ஒரு கும்பல் திடீரென ஜெயலட்சுமியின் மொபட்டை வழிமறித்த தோடு, அவரை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகா ஊருக்கு விரைந்து சென்று ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர்கள் அரியலூருக்கு விரைந்து சென்று மகளை கடத்தி சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் கடத்தல் கும்பல் சிக்கவில்லை.
இதையடுத்து அரியலூர் போலீசில் புகார் செய்தனர். அதில், கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (26), பாஸ்கர் (25) மற்றும் 5 பேர் சேர்ந்து ஜெயலட்சுமியை கடத்தி சென்றுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர். இதற்காக அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜெயலட்சுமி எதற்காக கடத்தப்பட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் அவரை கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக கடத்தி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் கும்பல் பிடிபட்டால்தான் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.
கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே குறிச்சிக்குளம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி ஒருவர் புதிதாக கட்டியுள்ள வீட்டின் புதுமனை புகுவிழா இன்று நடக்கிறது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார். இதையடுத்து அவரை வரவேற்று ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகில் கட்சி நிர்வாகிகள் சார்பில் பெரிய வடிவில் பேனர் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது பேனரின் கீழ் பகுதி தீயில் எரிந்து கிடந்தது. இதையறிந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டனர். மேலும் இது குறித்து குவாகம் போலீசில் புகார் செய்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். பேனர் தீப்பிடித்து எரிந்தது எப்படி என்று தெரியவில்லை. யாராவது மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பேனர் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கலப்பு திருமணம் செய்த வீரத்தமிழன், ஜெகதீஸ்வரி ஆகியோர் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதன் காரணமாகவும் அரியலூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews






