என் மலர்
செய்திகள்

செந்துறை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்த வாடி பிரிவு சாலையில் இரும்புலிக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மறித்து சோதனை செய்தபோது அனுமதியில்லாமல் போர் வெள்ளுக்கு போடும் கூழாங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ராமரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த லாரி உரிமையாளர் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த சுரேசையும் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். அதே போன்று வீராக்கன் கிராமத்தில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் நாகல்குழியை சேர்ந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.
இன்று அதிகாலை இரும்புலிக்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்ததோடு வங்காரத்தை சேர்ந்த பஞ்சநாதனை கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இரும்புலிக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டரின் இந்த அதிரடி வேட்டை செந்துறை பகுதி மணல் கொள்ளையர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story






