என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏற்பட்டது பற்றி எந்த தகவலும் இல்லை.
    • நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

    வங்காள விரிகுடாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர். எனினும், இதன் காரணமாக சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

    நிலநடுக்கம் பற்றி பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர், "அதிகாலையில் கொல்கத்தாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. விழித்திருந்ததால், உணர்ந்தேன்," என பதிவிட்டுள்ளார். 

    • மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
    • நாட்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன்.

    கொல்கத்தா:

    பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையன்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் உள்பட 30 பேர் பலியானார்கள். இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பலி எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைக்கிறது. அது மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இதற்கு மேற்குவங்காள கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் பதிலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அதுபற்றி அவர் கூறுகையில், நான் எந்த சர்ச்சையிலும் நுழைய விரும்பவில்லை. இது ஒரு ஜனநாயக அமைப்பு. முதல்-மந்திரியின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஒரு கவர்னராக நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா, மனிதனை கடவுளுடன் இணைக்கும் பாலமாக கருதுகிறேன். நாட்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன் என்றார்.

    • அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
    • அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள வீட்டிற்குள் மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய கொல்கத்தா, டாங்ராவில் உள்ள நான்கு மாடி வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தனி அறையில் இரண்டு பெண்கள், ஒரு சிறுமியின் உடல் கை மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

    அதே நேரத்தில் சகோதரர்களான, உயிரிழந்த 2 பெண்களின் கணவர்களும், மகனும் பயணித்த கார் இன்று காலை 3 மணியளவில் EM பைபாஸ் சாலையில் உள்ள அபிஷிக்தா கிராசிங் அருகே மெட்ரோ தூணில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் சகோதரர்கள் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனை அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதில் ஒருவர் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் வீட்டில் சடலமாக கிடந்தவர்களை கண்டுபிடித்துள்ளனர்.

    தகவலின்படி வீட்டில் மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, ரோமி டே (38), சுதேஷ்னா டே (39) ஆகிய பெண்களின் உடல்கள். அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

    கார் விபத்தில் சிக்கிய சகோதரர்கள், பிரனய் டே (45 வயது), பிரசுன் டே (43 வயது), மகன் பிரியம் டே (14) ஆகியோர் ஆவர். அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    எனவே 6 பேரும் திட்டமிட்டு தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இரண்டு சகோதரர்களும் தங்கள் மனைவிகளையும் மகளையும் கொன்றுவிட்டு, சிறுவனை அழைத்துக் கொண்டு வேண்டுமென்றே கார் விபத்தை ஏற்படுத்தினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

    • புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராகியதற்கு அமித் ஷாவுக்கு வாழ்த்துகள்.
    • தலைமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜக-வின் ஒரு பிரிவாகக் குறைக்கும் இலக்கு வெற்றிகரமாக அடையப்படும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார். ஞானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்துள்ளார். ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாகேத் கோகாலே கூறுகையில் "இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராகியதற்கு அமித் ஷாவுக்கு வாழ்த்துகள். உங்கள் திறமையான தலைமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜக-வின் ஒரு பிரிவாகக் குறைக்கும் இலக்கு வெற்றிகரமாக அடையப்படும் என நாடு நம்பிக்கை கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    • மகா கும்பமேளாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.
    • ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மகா கும்பமேளா விழா மரண விழாவாக மாறிவிட்டது.

    நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனிதமான கங்கா மாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.

    எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்?.

    பணக்காரர்கள், வி.ஐ.பி. கூடாரங்கள் ₹1 லட்சம் வரை பெற அமைப்புகள் உள்ளன.

    ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.

    ஒரு கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். என்ன திட்டமிடல் செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    • புலியை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்வதற்கான வனத்துறை ஊழியர்கள் புலியை துரத்தியுள்ளனர்.
    • புலி தாக்கியத்தில் காயமைடந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவன புலிகள் காப்பகத்தில் வனத்துறை ஊழியரை புலி ஒன்று தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

    காட்டிற்கு வெளியே உலா வந்த புலியை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்வதற்கான வனத்துறை ஊழியர்கள் புலியை துரத்தியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த புலி, வனத்துறை ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளது. உடனே மற்ற ஊழியர்கள் புலியை தாக்கியுள்ளனர். இதனால் புலி அந்த ஊழியரை தாக்குவதை விட்டுவிட்டு காட்டிற்குள் ஓடியது.

    புலி தாக்கியத்தில் காயமைடந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    • கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் தகதா கோஷ்.
    • பயந்துபோன அந்த பெண் நிர்வாண படப்பிடிப்பிற்கு ஒப்புக்கொண்டாள்.

     மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் தகதா கோஷ். இவரின் குழுவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் என கூறி இரண்டு மோசடி பேர்வழிகள் இளம் பெண்களை ஏமாற்றி வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி பிரதிக் பால் (37) மற்றும் தபன் பால் ஆகிய இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த கணக்குகள் மூலம் மாடல் ஆக விரும்பும் பெண்களை போட்டோஷூட்கள் நடத்துவதாகவும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி ஸ்டுடியோவிற்கு வரவழைத்து நிர்வாண புகைப்படங்கள் எடுத்து பின்னர் வன்கொடுமை செய்துள்ளனர்.

    22 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் தாங்கள் ஏமாற்றப்ட்டை உணர்ந்து தற்போது முன்வந்து புகார் அளித்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் புகைப்படக்கலைஞர் தகதா கோஷ் நம்பரை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்து தங்களுக்கு நடந்தது பற்றி கூறியுள்ளனர்.

    அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்று தகதா கோஷ், தனது பெயரில் நடந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குற்றவாளி பிரதிக் பால் போலீசாரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டான். தலைமறைவான மற்றொரு குற்றவாளி தபன் பால் தேடப்பட்டு வருகிறான்.

    இதுகுறித்து போலீஸ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தப் பெண்களை ஆடிஷன்களுக்கு அழைத்துள்ளனர். முதல் பெண் மே-ஜூன் மாதங்களில் மத்தியம்கிராம் ஸ்டுடியோவிற்கு வந்தார். முதலில், ஒரு சாதாரண போட்டோஷூட் நடந்தது.

    பின்னர், நிர்வாண போட்டோஷூட்கு வற்புறுத்தி உள்ளனர். அந்தப் பெண் மறுத்ததால், தனது மாடலிங் கனவை மறந்துவிடுமாறு அவளை  மிரட்டியுள்ளனர். பயந்துபோன அந்த பெண் நிர்வாண படப்பிடிப்பிற்கு ஒப்புக்கொண்டாள். அப்போதுஇரண்டு ஆண்களும் அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்தச் செயலைப் படம்பிடித்தும் உள்ளனர்.

    மாடலின் வாய்ப்புகளை எதிர்பார்த்து அந்த பெண் அமைதியாக இருந்தாள். ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இரண்டாவது பெண் கடந்த அக்டோபரில் இதேபோன்ற முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பல பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது.
    • யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.

    யானையும்- ஜே.சி.பி. எந்திரமும் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.

    மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டாம்டிம் பகுதியில் ஒரு காட்டு யானை உணவு தேடி ஊர்ப்புறத்துக்கு வந்துவிட்டது. இதையடுத்து கிராம மக்கள் யானையை துரத்த ஆரம்பித்தனர். கம்பு- குச்சிகளுடன் கூச்சல் போட்டால் மட்டும் யானையை விரட்ட முடியாது என நினைத்த ஒருவர், ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் யானையை விரட்ட முயற்சிக்கிறார்.

    அப்போது யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது. தன் பலத்தால் ஜே.சி.பி.யை அந்தரத்திற்கு உயர்த்துகிறது. இருந்த போதிலும் ஜே.சி.பி. டிரைவர், எந்திரத்தின் பின்பக்க தோண்டும் பகுதியை தரையில் பதித்து ஜே.சி.பி.யை கவிழ்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டு யானையுடன் சாதுரியமாக மோதுகிறார். யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.

    இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் விவாதத்தை தூண்டியது. 'வனவிலங்கை இப்படி துன்புறுத்துவதா?' என்று பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டனர். போலீசார் விசாரணை நடத்தி ஜே.சி.பி. டிரைவரை கைது செய்து உள்ளனர்.



    • தோளில் ஒரு பையுடனும் கையில் ரத்த தோய்ந்த கத்தியுடனும் அவர் நடந்து சென்றார்.
    • சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது.

    மேற்கு வங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் விடுப்பு கிடைக்காததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் அமித் குமார் சர்க்கார். கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள கரிகாரி பவனில் தொழில்நுட்பக் கல்வித் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

    அமித் குமார் சர்க்கார் நேற்று தனது சக ஊழியர்களை கத்தியால் குத்திவிட்டு, அதை கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்தார். தோளில் ஒரு பையுடனும் கையில் ரத்த தோய்ந்த கத்தியுடனும் அவர் நடந்து செல்வதை அவ்வழியாக சென்றோர் படம்பிடிக்க முயன்றனர்.

    அவர்களையும் தன்னை விட்டு தள்ளி இருக்குமாறு அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தகவலின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விடுமுறை எடுப்பது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றவே, அமித் குமார் அவர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    அவரால் கத்தியால் குத்தப்பட்ட ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்துனு சஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபு ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    அமித் குமாருக்கு விடுப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு  மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக போலீஸ் கருதுகிறது. 

    • வகுப்பறையில் பேராசிரியை மாணவனை திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ வைரலானது.
    • மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் முதலாம் ஆண்டு மாணவனை வகுப்பறையில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் வகுப்பறைக்குள் பேராசிரியை மற்றும் மாணவன் என இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சிந்தூர் பூசிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதோடு திருமணத்திற்கு சம்மதம் கூறி இருவரும் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோ பரவியதை தொடர்ந்து, பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியை விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

    அப்போது இந்த விவகாரம் குறித்து பேசிய பேராசிரியை, "இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு திட்டத்தின் ஒரு பகுதி. ஃபிரெஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் திட்டமிட்டு நடத்திய நாடகம் இது. எனக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டது. என் மீது அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்," என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வகுப்பறையில் மாணவனை மணந்து கொண்டது போன்ற வீடியோ பரவியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பல்கலைக்கழகத்தில் பணியை தொடர முடியாத நிலை இருப்பதாக கூறி அந்த பேராசிரியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர்.
    • ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த யானையின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது. பின்னர் பக்கத்தில் இருந்த கட்டிடத்தை யானை இடிக்க முயன்றது.

    இதனால் சிறுது காயமடைந்த யானை அங்கிருந்து விலகி நடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். 6 மாத விசாரணைக்கு பிறகு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் 20 வயதான 2 ஆம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர். தாயுடன் இஎஸ்ஐ குடியிருப்பில் அப்பெண் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலமுறை போன் செய்தும் மகள் பதிலளிக்கவில்லை. எனவே குடியிருப்பு வீட்டின் பூட்டிய அறைக் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிய நிலயில் இருந்ததை தாய் பார்த்துள்ளார்.

    உடனே மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டபோதோலும் மாணவி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மாணவி ஏற்கனேவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அறையில் தற்கொலை குறிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×