என் மலர்tooltip icon

    இந்தியா

    கைகளின் மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் மர்மம்
    X

    கைகளின் மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் மர்மம்

    • அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
    • அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள வீட்டிற்குள் மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய கொல்கத்தா, டாங்ராவில் உள்ள நான்கு மாடி வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தனி அறையில் இரண்டு பெண்கள், ஒரு சிறுமியின் உடல் கை மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

    அதே நேரத்தில் சகோதரர்களான, உயிரிழந்த 2 பெண்களின் கணவர்களும், மகனும் பயணித்த கார் இன்று காலை 3 மணியளவில் EM பைபாஸ் சாலையில் உள்ள அபிஷிக்தா கிராசிங் அருகே மெட்ரோ தூணில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் சகோதரர்கள் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனை அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதில் ஒருவர் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் வீட்டில் சடலமாக கிடந்தவர்களை கண்டுபிடித்துள்ளனர்.

    தகவலின்படி வீட்டில் மணிக்கட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, ரோமி டே (38), சுதேஷ்னா டே (39) ஆகிய பெண்களின் உடல்கள். அதே வீட்டில் அவர்களின் மகள், பிரியா டே (15) உடல் துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

    கார் விபத்தில் சிக்கிய சகோதரர்கள், பிரனய் டே (45 வயது), பிரசுன் டே (43 வயது), மகன் பிரியம் டே (14) ஆகியோர் ஆவர். அவர்கள் சென்ற கார் வேறு எந்த வாகனத்திலும் மோதவில்லை என்றும் நேராக மெட்ரோ நிலைய தூண் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    எனவே 6 பேரும் திட்டமிட்டு தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இரண்டு சகோதரர்களும் தங்கள் மனைவிகளையும் மகளையும் கொன்றுவிட்டு, சிறுவனை அழைத்துக் கொண்டு வேண்டுமென்றே கார் விபத்தை ஏற்படுத்தினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

    Next Story
    ×