மகா கும்பமேளா மரண விழாவாக மாறிவிட்டது: மம்தா பானர்ஜி ஆவேசம்

மகா கும்பமேளாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றார்.
மகா கும்பமேளா மரண விழாவாக மாறிவிட்டது: மம்தா பானர்ஜி ஆவேசம்
Published on

கொல்கத்தா:

மேற்குவங்க சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மகா கும்பமேளா விழா மரண விழாவாக மாறிவிட்டது.

நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனிதமான கங்கா மாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.

எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்?.

பணக்காரர்கள், வி.ஐ.பி. கூடாரங்கள் ₹1 லட்சம் வரை பெற அமைப்புகள் உள்ளன.

ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.

ஒரு கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். என்ன திட்டமிடல் செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com