என் மலர்
உத்தரப் பிரதேசம்
- ஆந்திராவில் சாலை விபத்துகள் வெற்றிகரமாக குறைந்துள்ளது.
- சாலை விபத்துகள் 4.7 சதவீதம் அதிகரித்து 2023ல் 23,652 ஆக உயர்ந்துள்ளது.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரபிரதேச போக்குவரத்து துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது.
அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தங்கள் குடும்பத்தினரின் படத்தை டாஷ்போர்டில் வைக்குமாறு போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடும்பப் படங்களைக் வைக்கும் யோசனை ஆந்திராவில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று போக்குவரத்து முதன்மைச் செயலாளர் எல்.வெங்கடேஷ்வர் லு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும்," இது ஓட்டுநர்களுக்கு அவர்களின் குடும்பங்களை நினைவூட்டும் மற்றும் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்ட அவர்களை ஊக்குவிக்கும்.
இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் சாலை விபத்துகள் வெற்றிகரமாக குறைந்துள்ளது.
கடந்த 2022ல் 22,596 ஆக இருந்த சாலை விபத்துகள் 4.7 சதவீதம் அதிகரித்து 2023ல் 23,652 ஆக உயர்ந்துள்ளது. அதனால், சாலை விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை புதுமையான தீர்வுகளை தேட தூண்டியது" என்றார்.
- தேர்தல் பத்திரம் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம்.
- பா.ஜனதா ஊழல்வாதிகளை மட்டும் வைத்து கொள்ளவில்லை. ஊழல் பணத்தையும் வைத்துள்ளது.
காசியாபாத்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
இந்த பாராளுமன்ற தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். ஒரு புறம். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா அரசியல் சாசனத்தையும், ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயல்கின்றன. மறுபுறம் இந்தியா கூட்டணியும் காங்கிரசும் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன.
தேர்தலில் மூன்று பெரிய பிரச்சனைகள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனை. 2-வது பண வீக்க பிரச்சனை. ஆனால் அதை பற்றி பேசாமல் பா.ஜனதா மக்களை திசை திருப்புகிறது. இந்த பிரச்சனைகளை பிரதமரோ பா.ஜனதாவோ பேசுவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது. அதில் தேர்தல் பத்திரங்கள் பற்றி விளக்க முயன்றார். வெளிப்படைத் தன்மைக்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார்.
இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. வெளிப்படைத்தன்மையை கொண்டு வர விரும்பினால் பா.ஜனதாவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள். அவர்கள் உங்களுக்கு (பா.ஜனதா) பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?
தேர்தல் பத்திரம் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இதை இந்தியாவில் அனைத்து தொழில் அதிபர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜனதா ஊழல்வாதிகளை மட்டும் வைத்து கொள்ளவில்லை. ஊழல் பணத்தையும் வைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் பிரதமர், ஊழலின் சாம்பியன் என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.
15-20 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால் தற்போது 150 இடங்கள்தான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பா.ஜனதா 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வரும் தகவல்களின்படி நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். உத்தரபிரதேசத்தில் நாங்கள் மிகவும் வலுவான கூட்டணியை கொண்டு உள்ளோம். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வலுவான அடித்தளம் அமைந்து இருக்கிறது.
நான் அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவேனா? என்று கேள்வி கேட்கிறார்கள். இது பா.ஜனதாவின் கேள்வி. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு முடிவுகள் அனைத்தும் மத்திய தேர்தல் கமிட்டி மூலம் எடுக்கப்படுகிறது. எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன்.
கடந்த 10 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி. வரி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் முறையை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.
வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்தவது எங்களது முதல் பணியாகும். அதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையில் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம். இதில் பயிற்சி உரிமை என்ற யோசனையும் ஒன்று.
உத்தரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான உரிமையை வழங்க முடிவு செய்துள்ளோம். பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குவோம். தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க சட்டம் இயற்றுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
- மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.
- 3-வது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி 8 தொகுதிகளுக்கு நடக்கிறது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மெயின்புரி தொகுதியில் இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் அமைச்சர் ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.
மூன்றாவது கட்டமாக மெயின்புரி தொகுதியில் மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
- சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான நாளை (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.
பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்
- பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை தேர்தல் முழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோதி மிர்தா மக்களிடையே பேசுகையில், "அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக இதே போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்.பி அனந்த் குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்நிலையில், "272 இடங்களில் வென்றாலே ஆட்சி அமைக்கலாம். ஆனால், அரசியலமைப்பை மாற்ற பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்" என்று அயோத்தி பாஜக வேட்பாளரும், எம்.பி-யுமான லல்லு சிங் பேசியுள்ளது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பி.க்களின் இத்தகைய சர்ச்சை பேச்சை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர். பாஜக இந்த தேர்தலில் வென்றால் அரசியலமைப்பை மாற்றி விடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
- காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்
காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.
- ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
- ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான் என்றார் அகிலேஷ்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிலிபித் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது; டீசல், பெட்ரோல் அல்லது அடிப்படைத் தேவைகள் எல்லாம் இப்போது விலை உயர்ந்தவை.
இந்த அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான்.
உத்தர பிரதேசம் அவர்களை ஆட்சி அமைக்க வைத்தது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 2014-ல் ஆட்சிக்கு வந்தாலும் 2024-ல் வெளியேற்றப்படுவார்கள். உத்தர பிரதேச மக்கள் அன்புடன் வரவேற்பார்கள், அவர்கள் உற்சாகமாகவும் விடை அளிப்பார்கள்.
அவர்கள் சீனா எங்கள் கிராமங்களின் பெயரை மாற்றியிருந்தால், சீனாவின் பெயரை மாற்றுவோம் என பா.ஜ.க. அரசு கூறுகிறது. சீனாவின் பெயரைத் திருத்தாதீர்கள், அவர்களுடன் வியாபாரத்தை நிறுத்துங்கள், அப்போதுதான் நம் தேசம் முன்னோக்கிப் பார்க்கப்படும் என தெரிவித்தார்.
- நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை.
- இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.
உத்தரபிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பி வருகிறார்.
இந்த சூழலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை.
இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளர்களாக அறிவிப்பது இல்லை. அகில இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி தெரிவித்தார்.
- அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது.
- அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர்.
அமேதி:
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து பா.ஜனதாவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். அதுவரை காங்கிரஸ் கோட்டையாக இருந்த அமேதி பா.ஜ.க. தொகுதியாக மாறியது.
இந்த தடவை அமேதி தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாரா? என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவர் இதை சூசகமாக தெரிவித்தார். நேற்று மீண்டும் 2-வது முறையாக ராபர்ட் வதேரா தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'அமேதி தொகுதி மக்கள் என்னை மிகவும் விரும்புகிறார்கள். அங்கு வந்து போட்டியிடும்படி தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன' என்று கூறினார்.

ராபர்ட் வதேரா மேலும் கூறுகையில், 'நாடு முழுவதிலும் இருந்து என்னை காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். என்னை தீவிர அரசியலில் ஈடுபடும்படி வலியுறுத்துகிறார்கள். அதுபற்றி நானும் ஆலோசித்து கொண்டு இருக்கிறேன்.
அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது. அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர். இந்த தடவை அவர்கள் அதை சரி செய்ய வேண்டும்.
அமேதி தொகுதியில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து நான் தேர்தலுக்கு வருவதாக சொல்லவில்லை. அரசியலில் ஈடுபடவே விரும்புகிறேன். அமேதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அமேதியில் ராகுல் போட்டியிட்டால் அவருக்காக நான் பிரசாரம் செய்வேன். ஒருவேளை அரசியலுக்கு வராவிட்டாலும் கூட மக்களுக்காக நான் தொடர்ந்து சேவை செய்வேன்' என்றார்.
- நிகிதா தன் அக்கா குழந்தையுடன் தனியாக ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையலறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது
- அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு நிகிதா கூறியுள்ளார்
உத்தரபிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்ற நிகிதா என்ற 13 வயது சிறுமி, அங்கு குடும்பத்தினருடன் வீட்டில் இருந்திருக்கிறார்.
அப்போது தன் அக்கா குழந்தையுடன் தனியாக ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையலறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. அச்சமயத்தில் குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.
சமையலறையில் நுழைந்த குரங்கு வீட்டு பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசி இருக்கிறது. பின்னர் குழந்தையை நோக்கி குரங்கு வந்ததால், என்ன செய்வது என்று புரியாமல் நிகிதா அமைதியாக இருந்திருக்கிறார். குழந்தை குரங்கைப் பார்த்து அழுதிருக்கிறது.
அச்சமயத்தில் வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா சாதனம் நாய் குரைப்பது போன்ற ஒலியை எழுப்பியதால், குரங்கு அலறித்துடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
இந்த நிகழ்வில் நிகிதா தனது சமயோசித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், உத்திர பிரதேசத்தில் குழந்தையை தூக்க வந்த குரங்கிடமிருந்து தப்பித்து கொள்ள கூகுள் அலெக்சாவை நாயை போல குரைக்க வைத்து சமயோசிதமாக தப்பித்த சிறுமிக்கு எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா எக்ஸ் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வாலிபர் மீது சிலிண்டரின் பாகம் பட்டு உயிரிழப்பு.
- தீ விபத்தால், தீ பரவி அருகில் இருந்த டீக்கடை, 3 சக்கர வாகனம் நாசம்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள தாபாவில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வாலிபர் மீது சிலிண்டரின் பாகம் பட்டு, உயிரிழந்தார்.
இந்த தீ விபத்தால், தீ பரவி அருகில் இருந்த டீக்கடை, 3 சக்கர வாகனம் ஆகியவையும் எரிந்து சாம்பலானது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பில்ஹூர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது, உயிரிழந்த நபர் எடுத்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிரதமர் மோடி உ.பியின் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
- காரில் நின்றபடி வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லக்னோ:
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அங்கு அவர் பேசுகையில், இந்தியா கூட்டணி கமிஷனுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டணி கட்சிகள் ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றன என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி சஹாரன்பூரில் இருந்து மாலை காசியாபாத் சென்றார். அங்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.
காரில் நின்றபடி வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களைத் தூவி மகிழ்ந்தனர்.
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ரோடு ஷோ நடந்தது. அதன்பின், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். இதில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.
#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Ghaziabad, Uttar Pradesh
— ANI (@ANI) April 6, 2024
Uttar Pradesh CM Yogi Adityanath is also present. #LokSabhaElections2024 pic.twitter.com/Un4M7qFbur






