என் மலர்
இந்தியா

கங்கை தாய் என்னை தத்தெடுத்து கொண்டுள்ளார்: பிரதமர் மோடி உருக்கம்
- எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன்.
- காசியுடனான எனது உறவு அற்புதமானது,
கங்கை நதியில் சிறப்பு பூஜைக்கு பிறகு பிரதமர் மோடி கூறும்போது, கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.
முன்னதாக மோடி, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, காசியுடனான எனது உறவு அற்புதமானது, ஒருங்கிணைந்தது மற்றும் ஒப்பிட முடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும் என்றார்.
Next Story






