என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ஜிக்கல் ஸ்டிரைக்"

    • பாகிஸ்தானில் நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை
    • ராகுல் காந்தியுடன் பாகிஸ்தானுக்குச் சென்று, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எங்கு நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும்.

    தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி, "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

    நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்கவில்லை முடியவில்லை, யாருக்கும் அது தெரியாது. இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் இல்லை என்று சரஞ்சித் சிங் சன்னி பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, "காங்கிரஸ் மீண்டும் ராணுவத்தையும் விமானப்படையையும் கேள்வி எழுப்பியுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக தான் நம்பவில்லை என்றும், தனக்கு ஆதாரம் வேண்டும் என்றும் சரண்ஜித் சிங் சன்னி மீண்டும் கூறியுள்ளார்.

    ராணுவமும் விமானப்படையும் பொய் சொல்வதாகவும், பாகிஸ்தான் உண்மையைச் சொல்கிறது என்றும் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் காங்கிரசும் ராகுல் காந்தி குடும்பத்தினரும் என்ன மாதிரியான மனநிலையைக் கொண்டுள்ளனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானே கூறிய போதிலும் இவ்வாறு கூறுகிறார்கள். உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால், ராகுல் காந்தியுடன் பாகிஸ்தானுக்குச் சென்று, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எங்கு நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும்" என்று தெரிவித்தார்.

    மேலும், சரஞ்சித் சிங் சன்னி பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து பாதுகாக்கிறது. இப்போது சரண்ஜீத் சிங் சன்னி நமது ராணுவத்தை கேள்வி கேட்கிறார். இந்த நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் ஏன் நமது ராணுவத்தை மனச்சோர்வடையச் செய்கிறது. காங்கிரஸ் நேரடியாக பாகிஸ்தானிடமிருந்து உத்தரவுகளைப் பெறுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

    • 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
    • சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது.

    தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி, "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

    பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் மக்களை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். வாகா எல்லையை மூடிவிட்டனர். சிந்து நதி நீரை இந்தியாவால் நிறுத்த முடியாது. அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும்.

    நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாம் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்கவில்லை. இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் இல்லை என்று சரஞ்சித் சிங் சன்னி பேசியதுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
    • பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம் அவர் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.

    1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?

    2) மோடிஜியால் ஒழிக்கப்பட்ட முத்தலாக் திட்டம் நல்லதா? கெட்டதா? நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா?

    3) மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா? கெட்டதா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

    4) முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்குப் பதிலாக, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    5) காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?

    இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

    ×