என் மலர்
இந்தியா

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது! - காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை
- 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
- சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது.
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி, "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் மக்களை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். வாகா எல்லையை மூடிவிட்டனர். சிந்து நதி நீரை இந்தியாவால் நிறுத்த முடியாது. அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும்.
நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாம் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்கவில்லை. இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் இல்லை என்று சரஞ்சித் சிங் சன்னி பேசியதுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.