என் மலர்
உத்தரப் பிரதேசம்
- வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்து குப்பைகளை அகற்றினர்.
- குழந்தைகள் தீயில் எரிந்து சாகும்போது பாஜக அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீயில் உடல் கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் இடிந்துபோயுள்ள இந்த சோகமான சூழலுக்கு மத்தியிலும், மருத்துவமனையைப் பார்வையிட வந்த உத்தரப் பிரதேச ஆளும் பாஜக துணை முதல்வர் பாரேஷ் பாதாக் வருகைக்காக மருத்துவமனையில் விஐபி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. துணை முதல்வர் வருகையை முன்னிட்டு 10 குழந்தைகள் எரிந்து கருகிய அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ள பாதைகளையும், மருத்துவமனைக்கு உள்ளேயும் ஊழியர்கள் அவசர அவசரமாக சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சடலங்களின் வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்தும் மேற்படி வேலை பார்த்துள்ளனர். இந்த விஐபி வரவேற்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக அரசின் துளியும் உணர்ச்சியற்ற செயலை பாருங்கள். ஒரு புறம் குழந்தைகள் உடல் கருகி மரணித்துள்ளனர் , அவர்களின் குடும்பங்கள் அழுத்து ஓலமிட்டுகொண்டின்றன. மறு புறம் துணை முதல்வரை வரவேற்கப் பாதைகளில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டு வருகிறது.
துணை முதல்வரின் வருகைக்காக மருத்துவமனை வளாகம் முழுவதிலும் அவசர அவசராமாக குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் நடத்துள்ளதென குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுதான் இந்த பாஜக அரசின் அலட்சியப் போக்கின் உச்சம். குழந்தைகள் தீயில் எரிந்து செத்துக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது. என்ன ஒரு வெட்கக்கேடான செயல் என்று சாட்டியுள்ளது.
இதற்கிடையே விஐபி வரவேற்பு சர்ச்சையானது அடுத்து தனது வருகைக்கு சிறப்பு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் இந்த விபத்து தொடர்பாக உ.பி. அரசின் மெத்தனப் போக்கை காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோரும் விமரித்துள்ளனர்.
- அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- இந்த விபத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஜார்க்கண்டில் நேற்று மாலை திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள தம்பூர் பகுதியில் இருக்கும் மணமகனின் வீட்டுக்கு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலை 74-ல் வந்தபோது எதிரே வந்த டெம்போ மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 2 வாகனங்களும் அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தன. மணமக்கள் வந்த வாகனத்தில் 11 பேர் இருந்தனர். அவர்களில் மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் உள்பட உறவினர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வேன் டிரைவர் உயிரிழந்தார்.
அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
- ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தினால் உடல்கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
இந்நிலையில், தீ விபத்தினால் உடல்கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்தார்
- பாஜக எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
- இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பாஜகவின் பதோஹி தொகுதி எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
அப்போது மட்டன் குழம்பில் ஆட்டுக்கறி இல்லாததால் கோவமான இளைஞர் ஒருவர் உணவு பரிமாறிய நபரிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி இரண்டு தரப்பினர் சண்டையிட்டு கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.
- கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தியுள்ளான்.
கணவனை பிரிந்து தன்னுடன் வர மறுத்த பெண்ணை அவளது 4 வயது மகனின் கண்முன்னே கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் சிஜர்சி கிராமத்தில் ஷில்பி என்ற பெண் தனது கணவர் அஜய் மற்றும் தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். ஷில்பி கடந்த 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.
நீண்ட நாட்களாக அவளது கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு ஷில்பியை பிரதீப் கட்டாயப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி ஷில்பியின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு அவளது வீட்டிற்கு பிரதீப் சென்றுள்ளார். அப்போது அவளது கணவன் மற்றும் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு பிரதீப் மீண்டும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஷில்பி சம்ம்மதிக்கவில்லை. இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பிரதீப் ஷில்பியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
ஷில்பியை பிரதீப் கொலை செய்ததை நேரில் பார்த்த அவளது 4 வயது மகன் நடந்த சம்பவம் முழுவதையும் போலீசாரிடம் கூறினான். இதனையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் அண்மையில் வெளியானது.
- ஜெகதீஷ் சிங் பதானியிடம் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வருபவர் திஷா பதானி. அண்மையில் இவர் நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானியிடம் உத்தரபிரதேச அரசில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
உ.பி. அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் அரசாங்க கமிஷனில் உயர் பதவி வாங்கு தருவதாக சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சிங் பதானியிடம் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை உண்மை என நம்பிய ஜெகதீஷ் சிங் பதானி, ரூ.20 லட்சத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதோடு, ரூ.5 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்.
ரூ.25 லட்சம் பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாததால் மோசடி கும்பலிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது ஜெகதீஷ் சிங் பதானியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி இது தொடர்பாக போலிசீடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உ.பி. அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 10 குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியாகியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி பலியாகியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர், ஏராளமான வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடிவருகின்றனர்.
தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி, சுகாதாரத் துறை செயலர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பாட்னா அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
இறுதியில், பாட்னா அணி 52-31 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது பாட்னா அணி பெற்ற 6-வது வெற்றி ஆகும்.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் 32-24 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வீழ்த்தி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.
- சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வடிந்து கொண்டே இருந்தது.
- கடந்த 11-ந் தேதி ஆபரேஷன் நடந்தது.
நொய்டாவில் காமா 1-வது செக்டரில் தனியார் கண் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த நிதின்பாடி என்பவர் தன் 7 வயது மகன் யுதிஷ்டிரனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.
சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வடிந்து கொண்டே இருந்தது. இதை அங்கு பரிசோதித்தபோது கண்ணில் பிளாஸ்டிக் போல ஏதோ பொருள் இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். அதனை ஆபரேஷன் மூலம் அகற்றிவிடலாம் என்றார்.
அதன்படி கடந்த 11-ந் தேதி ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. ஆனால் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் டாக்டர் ஆபரேஷன் செய்து விட்டார்.
இதை அறிந்து சிறுவனின் பெற்றோர் கொந்தளித்தனர். ஆபரேஷனுக்கு ரூ.45 ஆயிரம் செலவிட்டதாக கூறிய அவர்கள், தவறாக ஆபரேஷன் செய்த டாக்டரின் மருத்துவ உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் யு மும்பா அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினர்.
இறுதியில், யு மும்பா அணி 40-34 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இது யு மும்பா அணி பெற்ற 6-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் யு மும்பா அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணி வீழ்த்தி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.
- ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடினார்.
- கொல்கத்தா அணிக்காக 13 கோடி ரூபாய் கொடுத்து ரிங்கு சிங் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங் குஜராத் வீரர் யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டி தான் ரிங்கு சிங்கின் வாழ்க்கையையே மாற்றியது.
இதன் பின் இந்திய டி20 அணியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடினார். தற்போது ஐபிஎல் 2025 தொடரில் கொல்கத்தா அணிக்காக 13 கோடி ரூபாய் கொடுத்து ரிங்கு சிங் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ரூ.3.5 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீச்சல் குளம், 6 படுக்கையறை கொண்ட இந்த பிரம்மாண்ட வீட்டில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் பேட்டை வைத்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது திறமையால் முன்னுக்கு வந்து பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ள ரிங்கு சிங்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி அவர் வளர்த்து விற்று வந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சுமார் 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராகுலின் தந்தை நொய்டாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக 2013 இல் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். அதனால் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ராகுலுக்கு காவல்துறையில் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரால் அந்த போலீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து வியாபாரத்தில் இறங்கிய ராகுலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலைக் குறைப்பதற்காக ராகுல் கஞ்சா அடிக்க தொடங்கினார். பின்னர் தனது தேவைக்காக வீட்டில் கஞ்சா வளர்க்க தொடங்கி பின்னர் அதனையே தனது தொழிலாக அவர் மாற்றியுள்ளார்.
நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெப் சீரிஸ்களை பார்த்து ஆன்லைனில் கஞ்சா விதைகளை தனது வீட்டில் ராகுல் கஞ்சா வளர்க்க தொடங்கியுள்ளார். அங்கு சுமார் 80 கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி வளர்த்து விற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீட்டில் கஞ்சா வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனை செய்த போலீசார் ராகுலை கைது செய்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.






