என் மலர்
நீங்கள் தேடியது "mother died"
- குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ள மகனை தாய் தொடர்ந்து கண்டித்தார்.
- இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகனுக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த கபிரியேல் கிங் மனைவி ஜெலின் மேரி (வயது56). இவருக்கு ஜான் வினோத்குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அண்ணா நகர் பகுதியில் உள்ள இவர்களது வீட்டின் மேல் பகுதியில் ஜெலின் மேரி மற்றும் இவரது மகள்கள், கணவருடன் வசித்து வருகின்றனர். கீழ்ப்பகுதியில் மகன் ஜான் வினோத்குமார் வசித்து வருகிறார். ஜான் வினோத்குமார் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை ஜெலின் மேரி தொடர்ந்து கண்டித்தார்.
இருந்தபோதும் அவர் குடி பழக்கத்ைத நிறுத்தவில்லை. இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜான் வினோத்குமாருக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜான் வினோத்குமார் தனது தாய் மேரி திட்டுவதால் மனம் உடைந்து தொடர்ந்து என்னை திட்டுவதால் நான் இறந்து விடுகிறேன் என்று கூறி தான் வைத்திருந்த மது பாட்டிலில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.
உன்னுடைய குடிப்பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை நான் கண்டித்தும் நீ திருந்த போவதில்லை என்று தாய் ெஜலின் மேரியும் மகன் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை குடித்து விட்டார். சற்று நேரத்தில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கபிரியேல்கிங் தனது உறவினர்கள் உதவியுடன் மகன் மற்றும் மனைவியை கொடைக்கானல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஜெலின் மேரி பரிதாபமாக பலியானார். மகன் ஜான் வினோத்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது.
- ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் சாஸ்திரி நகரில் உள்ள கேபிடல் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த சில மணி நேரங்களில் லிப்ட் அறுந்து விழுந்து தாய் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கரிஷ்மா (30) என்ற பெண் சிசேரியன் பிரசவத்திற்காக காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு அவர் பொது அறைக்கு மாற்ற ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். சம்பவ இடத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தப்பினர்.
பிறந்த பெண் குழந்தை வேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மீரட்டின் லோஹியா நகர் காவல் நிலையத்தில் கேபிடல் மருத்துவமனையின் மருத்துவர், மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீரட் தலைமை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 15 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மருத்துவ மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை மற்றும் சிஎம்ஓ குழுவை அமைத்துள்ளனர்.
கோவை:
கோவை செல்வபுரம் பாரதிரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் கணக்காளராக இருந்தார். இந்நிலையில் நேற்று கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்த்திக்கின் தாய் சமீபத்தில் இறந்தார். தாயை நினைத்து அடிக்கடி உறவினர்களிடம் கூறி வேதனைப்பட்டார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.