என் மலர்
நீங்கள் தேடியது "mill board employee suicide"
தாய் இறந்ததை நினைத்து அடிக்கடி உறவினர்களிடம் கூறி வேதனை அடைந்த மின் வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை செல்வபுரம் பாரதிரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் கணக்காளராக இருந்தார். இந்நிலையில் நேற்று கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்த்திக்கின் தாய் சமீபத்தில் இறந்தார். தாயை நினைத்து அடிக்கடி உறவினர்களிடம் கூறி வேதனைப்பட்டார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.