என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கொடைக்கானலில் மகனின் குடிப்பழக்கத்தை திருத்த விஷம் குடித்த தாய் பலி
- குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ள மகனை தாய் தொடர்ந்து கண்டித்தார்.
- இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகனுக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த கபிரியேல் கிங் மனைவி ஜெலின் மேரி (வயது56). இவருக்கு ஜான் வினோத்குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அண்ணா நகர் பகுதியில் உள்ள இவர்களது வீட்டின் மேல் பகுதியில் ஜெலின் மேரி மற்றும் இவரது மகள்கள், கணவருடன் வசித்து வருகின்றனர். கீழ்ப்பகுதியில் மகன் ஜான் வினோத்குமார் வசித்து வருகிறார். ஜான் வினோத்குமார் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை ஜெலின் மேரி தொடர்ந்து கண்டித்தார்.
இருந்தபோதும் அவர் குடி பழக்கத்ைத நிறுத்தவில்லை. இதனால் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜான் வினோத்குமாருக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜான் வினோத்குமார் தனது தாய் மேரி திட்டுவதால் மனம் உடைந்து தொடர்ந்து என்னை திட்டுவதால் நான் இறந்து விடுகிறேன் என்று கூறி தான் வைத்திருந்த மது பாட்டிலில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.
உன்னுடைய குடிப்பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை நான் கண்டித்தும் நீ திருந்த போவதில்லை என்று தாய் ெஜலின் மேரியும் மகன் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை குடித்து விட்டார். சற்று நேரத்தில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கபிரியேல்கிங் தனது உறவினர்கள் உதவியுடன் மகன் மற்றும் மனைவியை கொடைக்கானல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஜெலின் மேரி பரிதாபமாக பலியானார். மகன் ஜான் வினோத்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






