என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க திட்டம்.
- அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதன்பின் உரையாற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.12,000 கோடிக்கு மேல் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
* அ.தி.மு.க. ஆட்சியில் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வந்தோம்.
* கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க திட்டம்.
* அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
* தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைவு கூட வேளாண் அமைச்சருக்கு இல்லை என்றார்.
- குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
* மயிலாடுதுறையில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் நீடூர் ஊராட்டிசியில் 85 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம்.
* குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* வெள்ளக்கோவில் கிராமங்களில் ரூ.8 கோடியில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
* பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
* சீர்காழியில் புதிய நகராட்சி அலுவலகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.
* தரங்கம்பாடி-ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
* சீர்காழி, திருமுல்லைவாயல் பகுதிகளில் மேற்கூரை நீட்டிப்பு, தூர்வாரும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை.
* சீர்காழி நகராட்சியில் தேர் வீதிகளில் ரூ.8 கோடி மதிப்பில் வடிகால் வசதி மேற்கொள்ளப்படும்.
- தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை.
- கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை.
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காது இன்றும் அரசியல் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
* தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை.
* கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்கள்.
* கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை.
* கச்சத்தீவை தாரைவார்ப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று என்று அனைவரும் அறிவர்.
* கச்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
- சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
திருவண்ணாமலை:
விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக நாகர்கோவில்-காச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடாவுக்கு சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே தண்டரை கிராமத்திற்கு அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
அதனால், நடுவழியிலேயே எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திவிட்டு, என்ஜின் டிரைவர் கீழே இறங்கி வந்தார். பின்னர், ரெயில்வே கேட் மூடாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கேட் கீப்பரின் அலட்சியத்தால் கேட் மூடாதது தெரியவந்தது.
பின்னர், அவர் ரெயில்வே கேட்டை மூடிவிட்டு சென்றார். இதனால் சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இது தொடர்பாக, எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி தெற்கு ரெயில்வே கோட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தார். அதன் பேரில், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் ராமு என்பவரை தெற்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி கேட்டை மூடாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஏற்கனவே ரெயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.
- அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் வீடு வீடாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
இதையடுத்து மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
* மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.
* நேற்று கொட்டும் மழையிலும் மக்கள் என் மீது அன்பு மழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
* மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.
* மக்களை நேரில் சந்தித்து தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக 4 ஆண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு பெற்றார்.
- வருகிற 25ஆம் தேதி எம்.பி.யாக தவி ஏற்க உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வருகிற 25ஆம் மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இது தொடர்பாக கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் "புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்" எனப் பதிவிட்டு, படங்களையும் பதிவிட்டுள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது. மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. அதன்படி ஒரு இடத்தை வழங்கியது.
- டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பொய்த்து விட்டது.
- கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் மற்றும் பிரதிநிதிகள் பேசியதாவது:-
டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பொய்த்து விட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால் தடுப்பணைகள் கட்டி தர வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு மானிய தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. பெயரளவில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். கரும்பு பயிரில் நோய் தாக்குதல் அதிகம் உள்ளதால் விவசாயம் குறைந்து விட்டது. நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணப்பயிர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகள் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளோம். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
- காவிரி ஆற்றில் ராசிமணல் முதல் ஒகேனக்கல் வரை பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது.
- வனத்துறையினர் முதலைகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க வேண்டும்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள அருவிகளில் குளிக்கவும், பரிசலில் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
காவிரி ஆற்றில் ராசிமணல் முதல் ஒகேனக்கல் வரை பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றும் போது, இப்பகுதிகளில் ஆற்றில் இருக்கும் முதலைகள் தண்ணீரை விட்டு வெளியே வரும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அடர்ந்த வனப்பகுதியில் வாழும் முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்படுவது வழக்கம்.
கடந்த வாரங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. வெள்ளப்பெருக்கின் போது அடித்து வரப்பட்ட முதலை ஒன்று, தற்போது தண்ணீர் குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே கரையோரம் மணல் பரப்பில் ஓய்வெடுத்து வருவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதனால் வனத்துறையினர் முதலைகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க வேண்டும்.
ஆற்றை விட்டு வெளியேறும் முதலைகளை, அங்குள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும் என வன உயிரியின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மனுவை தாக்கல் செய்துள்ளளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது.
த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மனுவை தாக்கல் செய்துள்ளளார். அம்மனுவில், சிவப்பு, மஞ்சள்- சிவப்பு நிறம் பதிவு செய்யப்பட்ட சபை முதன்மை அதிகாரிகள், ஊழியர்கள், ஆண்கள், முகவர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
- விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30-ந்தேதி தொடங்க உள்ளது.
* இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
* விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
* கலந்தாய்வுக்காக போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்கள் 3 ஆண்டு மருத்துவ படிப்பில் சேர தடை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- சமூக நீதி எங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? விடுதி கட்டிடத்திற்கு எதற்கு சமூக நீதி பெயர்?
- வெற்று அறிக்கை... வெற்று விளம்பரங்கள்...
திருச்சி:
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு உள்ளது.
* மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என தி.மு.க. செயல்படுகிறது.
* சமூக நீதி எங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? விடுதி கட்டிடத்திற்கு எதற்கு சமூக நீதி பெயர்?
* 100 சதவீதம் இந்து என பா.ஜ.க. கூறினால் 90 சதவீதம் இந்து என தி.மு.க. கூறுகிறது. ஆன்மிக ஆட்சி நடக்கிறது என சேகர்பாபு கூறுகிறார்.
* வெற்று அறிக்கை... வெற்று விளம்பரங்கள்... என்றார்
- கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், கர்நாடக அணைகளான கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் முழுமையாக நிரம்பியதால், அணையின் பாதுகாப்பு கருதி, 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், அருவியில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் பரிசல் இயக்க மட்டும் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 16ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தொடர்ந்து நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். அதே சமயம், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும்மாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.






