என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
    • பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.

    மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    * மயிலாடுதுறையில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் நீடூர் ஊராட்டிசியில் 85 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம்.

    * குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

    * வெள்ளக்கோவில் கிராமங்களில் ரூ.8 கோடியில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

    * பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.

    * சீர்காழியில் புதிய நகராட்சி அலுவலகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

    * தரங்கம்பாடி-ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.

    * சீர்காழி, திருமுல்லைவாயல் பகுதிகளில் மேற்கூரை நீட்டிப்பு, தூர்வாரும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை.

    * சீர்காழி நகராட்சியில் தேர் வீதிகளில் ரூ.8 கோடி மதிப்பில் வடிகால் வசதி மேற்கொள்ளப்படும்.

    Next Story
    ×