என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்டா பகுதியில் தடுப்பணை கட்டிதர வேண்டும்- எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
- டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பொய்த்து விட்டது.
- கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் மற்றும் பிரதிநிதிகள் பேசியதாவது:-
டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பொய்த்து விட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால் தடுப்பணைகள் கட்டி தர வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு மானிய தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. பெயரளவில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். கரும்பு பயிரில் நோய் தாக்குதல் அதிகம் உள்ளதால் விவசாயம் குறைந்து விட்டது. நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணப்பயிர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகள் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளோம். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.






