என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஏற்கனவே கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
சென்னை :
சென்னை கிண்டில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசி உள்ளார்.
கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
- கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சென்னை:
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானாவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை நிறுவ அரசு முன்வருமா? என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியாதவது:-
திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானா நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேபோல். பொது இடத்திலோ சாலைகளிலோ சாலை ஓரத்திலோ சிலை வைப்பதற்கு தடை உள்ள காரணத்தினால் தான் உடனடியாக அனுமதி வழங்கப்பட முடியவில்லை. அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
- சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றினார்.
இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
நீட் தேர்வு ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கும் என்று முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் கூறினார்.
- தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது கவலையளிப்பதாகக் கூறினார்.
- மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கும் விஜய் ஆறுதல் கூறினார்.
சென்னை:
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. போதைப்பொருள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதகிம் காணப்படுவதும், பரவலாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் இதற்கு சாட்சியாக காட்டப்படுகிறது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது கவலையளிப்பதாகக் கூறினார். போதைப்பழக்கத்திற்கு எதிராக Say No To Temporary Pleasures, Say No To Drugs என்று கூறி மாணவர்களை உறுதி மொழியும் ஏற்க வைத்தார் விஜய்.
மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கும் விஜய் ஆறுதல் கூறினார். வெற்றியும், தோல்வியும் இருசேர கலந்தது தான் வாழ்க்கை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய விஜய், Success is never Ending, Failure is never Final என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
Say NO to Temporary Pleasures...
— TVK Vijay Trends (@TVKVijayTrends) June 28, 2024
Say NO to Drugs !#ThalapathyHonorsStudents #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/8O73RZ60OC
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தின் மலையோர கிராமங்களிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. களியல், பாலமோர், மோதிர மலை, குற்றியாறு, தச்சமலை பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. களியலில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நேற்றை விட பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தாலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து 4,048 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்தி பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

முக்கடல் மாம்பழத்துறை ஆறு அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருவதால் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.85 அடியாக இருந்தது. அணைக்கு 2,237 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 632 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,048 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 1,059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.79 அடியாக உள்ளது. அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணை நீர்மட்டம் 15.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 45.19 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.80 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 9.4, பெருஞ்சாணி 7.4, சிற்றாறு 2-4, கன்னிமார் 2.8, மயிலாடி 2.2, நாகர்கோவில் 4.2, பூதப்பாண்டி 3.2, முக்கடல் 2, பாலமோர் 11.4, தக்கலை 5.2, குளச்சல் 6.4, இரணியல் 6.2, அடையாமடை 1.6, குருந்தன்கோடு 2.6, கோழிப்போர்விளை 3.6, மாம்பழத்துறையாறு 3, களியல் 16.2, குழித்துறை 8.4, சுருளோடு 7.2, ஆணைக்கிடங்கு 2.6, திற்பரப்பு 6.5.
- 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
- மாணவர்களின் மத்தியில் அமர்ந்த விஜய் அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மற்றும் வருகிற 3-ந்தேதி என இரண்டு கட்டங்களாக விழா நடைபெறுகிறது.
விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, இன்று 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அதிகாலையிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு வந்தார். இதனையடுத்து விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்பு அவர்களுக்கான இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் சுமார் 10 மணியளவில் த.வெ.க. தலைவர் விஜய் அரங்கிற்குள் வந்தார். அப்போது அங்கு இருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர். இதன்பின் மாணவர்களின் மத்தியில் அமர்ந்த விஜய் அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மேடையில் தனித்தனியாக சான்றிதழ் வழங்கினார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி குடும்பத்துடன் எடுத்துக்கொண்டார். அப்போது, விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் நன்றி தெரிவித்து பேசினர்.
#WATCH | Tamil Nadu: Actor Vijay felicitates the top three toppers of Class 10 and 12 board examinations of the state, in Chennai pic.twitter.com/dS2aAeoojO
— ANI (@ANI) June 28, 2024
- நேற்று மாலை 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,894 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 62.44 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.
- மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார்.
- கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்
இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருக்காலம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து, போலீசார், கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தப்பவிட்ட சங்கராபுரம் போலீசார் 3 பேரை உடனடியாக ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.
- மது விற்பனை சரிவுக்கான காரணத்தை கடை மேற்பார்வையாளர்கள் விவரித்தனர்.
- தற்போதைய சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பல்க் சேல்ஸ் செய்ய வேண்டாம்.
சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் கஜல் நாயக்கம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா, டாஸ்மாக் கடைகளில் 20 சதவீதம் மது விற்பனை சரிந்துள்ளதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
மது விற்பனை சரிவுக்கான காரணத்தை கடை மேற்பார்வையாளர்கள் விவரித்தனர்.
மேலும், கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிந்தும் தெரிவிக்காமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பல்க் சேல்ஸ் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
டாஸ்மாக் கடை திறக்கும் நேரம், மூடும் நேரம் குறித்து கடை மேற்பார்வையாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
- மார்கழி 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் முனியப்பன் கோவில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த உண்டியலை மாதத்திற்கு ஒருமுறை பிரித்து காணிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணும் பணி தருமபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணும்போது அதில் ஒரு காசோலை இருந்ததை கண்டு எடுத்தனர்.

அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.
உடனே காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரன் என்பவர் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்து இன்று சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என தெரியவரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு, சிலந்தையாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
இந்த அணையை ஆதாரமாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 8 ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 25-ந்தேதி நிலவரப்படி 52.96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 58.17 அடியாக உயர்ந்தது. அதன்படி 3 நாளில் அணையின் நீர் இருப்பு 5.21 அடி உயர்ந்துள்ளது.அணைக்கு வினாடிக்கு 2070 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.
- நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. நீட் முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2017-ம் ஆண்டு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
* நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.
* நீட் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது.
* மருத்துவ துறையிலும் சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது.
* முனைவர் அனந்த கிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டவர் கருணாநிதி.
* நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய நிலையில் மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.
* நீட் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக எழுந்து வருகின்றன.
* நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
* அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை நிலை குலையச் செய்துள்ளன.
* நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
* நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.






