என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட [பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.
இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நாளை[ஆகஸ்ட் 17] காலை 6 மணி முதல் [ஆகஸ்ட்18] காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், "கொல்கத்தா பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், " கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக மருத்துவர்கள் ஒன்றிணைவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம், ஆனால் கிடைக்காமலே போய்விடக்கூடாது என்று கூறுவார்கள்.
அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என்றார்.
- திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி பிடிபட்டான்.
- ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.
திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.
போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரவுடி மனோ நிர்மல்ராஜ்க்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
- மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தல்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
அப்போது, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்," மழைநீர் வடிகால்களை தூர்வாறும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து செல்ல கூறியுள்ளோம். மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
- 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
- 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை" என அமைச்சர் உதயநிதி கேள்வி.
வடகிழக்கு பருவ மழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
ஆலோசனை கூட்டத்தில், "7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கண்டித்தார்.
மேலும் அவர், "கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும் ?" என கேள்வி எழுப்பினார்.
" ஆரம்பித்துவிட்டோம், முடிப்போன்னு சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. சிரமம் இருந்தால் சொல்லுங்கள், அனைத்து அமைச்சர்களும் இருக்கிறோம், தீர்வு கொடுக்கிறோம். மழை வந்துவிட்டால் எதுவும் செய்ய முடியாது" என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் எம்.பி., தயாநிதி மாறன் பேசுகையில், "சென்ட்ரல் ரெயில் நிலையம் பின்னால் இருக்கும் கல்யாணபுரம் பகுதி ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தால் பாதிக்கிறது. பல முறை சொல்லிவிட்டேன், பல அமைச்சர்களும் நேரில் வந்து பார்த்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த மழையின்போது எத்தனை புகார்கள் பெறப்பட்டன. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? பணம் இல்லை, வேலை நடைபெறவில்லை என்று மக்களிடம் போய் சொல்ல முடியாது" என்றார்.
- கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
- பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 42).
இவரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்த தவசிக்கனி (52), நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்த ஜோதிபாஸ் (42) ஆகிய இருவரும் தலையாரி வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் கணேசனுக்கு தலையாரி வேலை கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணேசன் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டார். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தவசிக்கனி, ஜோதி பாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.
- தொகுதி செயலாளர் மற்றும் தொகுதி தலைவரை தேர்வு செய்வதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் பல தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை பெற்றிருந்தது. சில தொகுதிகளில் 2-வது இடத்தையும் பிடித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ம.க.வை மேலும் பலப்படுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டு உள்ளார்.
அரசியல் களத்தில் பா.ம.க.வின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தலா ஒரு தொகுதி செயலாளர், தலா ஒரு தலைவர் நியமிக்கப்படுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தொகுதி செயலாளர் மற்றும் தொகுதி தலைவரை தேர்வு செய்வதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் பா.ம.க. மகளிர் அணியை வலுப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்தார். இதற்காக 234 சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒரு மகளிர் அணி செயலாளர் மற்றும் தலா ஒரு மகளிர் அணி தலைவரை நியமிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தற்போது அறிவித்துள்ளார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர் பல்வேறு சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளித்து மகளிர் அணி செயலாளர் மற்றும் தலைவரை தேர்வு செய்வார்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் பா.ம.க. மகளிர் அணி வலுவானதாக மாற உள்ளது.
- 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்குமெயின் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே சுதந்திர தினமான நேற்று மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அனில் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் நல்லதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
போலீசார் சோதனையில் மதுபான கடையில் 500 மது பாட்டில்களும் அருகாமையில் உள்ள அறை ஒன்றில் 1000 மதுபாட்டில்களும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.
- குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்தது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்றும் மழை நீடித்தது.
காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது. மழைக்கு சில இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இன்று அதிகாலை குன்னூரில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் எம்.ஆர்.சி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், மரங்கள் மற்றும் மண் திட்டுகள் இருக்கும் பகுதிகளில் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- இரு தரப்பு மாணவர்களும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
- ஒரு தரப்பு மாணவருக்கும் மற்றொரு தரப்பு மாணவருக்கும் விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் கோவிந்தபேரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் சேரன்மகாதேவி, களக்காடு, வீரவநல்லூர், முக்கூடல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் அமர்ந்து செல்போனில் பிரீ-பயர் கேம் விளையாடி உள்ளனர்.
அப்போது ஒரு தரப்பு மாணவருக்கும் மற்றொரு தரப்பு மாணவருக்கும் விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
உடனே ஒரு தரப்பு மாணவர் அவரது ஊரில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட எதிர் தரப்பு மாணவரை தாக்குவதற்காக கல்லூரி அருகே உள்ள பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த மாணவருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பு மாணவர்களும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் 9 பேரை இன்று கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் அடங்குவர். தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர்.
- வழித்தடம் அமைக்கும் பணிகள் வேகமான நடந்து வருகின்றன.
- அடுத்தமாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
பூந்தமல்லி:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கி.மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் அமைகிறது. இதற்காக உயர்நிலைப்பாதை, சுரங்கப்பாதை, ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் வரை, மொத்தம் 26 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் வேகமான நடந்து வருகின்றன.
இதில், பூந்தமல்லி பைபாஸ் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை மேம்பால பாதையா கவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப்பாதையாகவும் வழித்தடம் அமைகிறது.
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர் பைபாஸ் உள்ளிட்ட, 19 மேம்பால மெட்ரோ ரெயில் நிலையங்களும், ஒன்பது சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களும் அமைகின்றன.
பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் மேம்பால பாதை பணிகள் முடிக்கப்பட்டு தற்போது ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் மாதவரத்திற்கு அடுத்த படியாக பூந்தமல்லில் 2-வது மிகப்பெரிய மெட்ரோ ரெயில் பணிமனை அமைகிறது. சுமார் 40.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.187 கோடி செலவில் இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இங்கு மொத்தம் 17 கட்டிடங்கள் வருகின்றன. மெட்ரோ ரெயில் பழுதுபார்க்கும் இடம், தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் மையம், நிர்வாக அலுவலகம் மற்றும் கட்டுபாட்டு மையங்களும் இங்கு வருகின்றன.
இதேபோல் சோதனை ஓட்டத்துக்கான ரெயில் தண்டவாளம், பழுதுபார்ப்புக்கு தனியாக தண்டவாளங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பூந்தமல்லி பணிமனையில் சோதனை ஓட்டத்துக்கு தேவையான தண்டவாளம் முழுவதும் அமைக்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. இது சுமார் 820 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணி சமீபத்தில் தான் முடிந்துள்ளது. அடுத்த மாதத்தில் டிரைவர்கள் இல்லாத மெட்ரோ ரெயில்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில்கள் வந்ததும் பணிமனையில் உள்ள பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மேல்மட்ட வழித்தடத்தில் பணிகள் முழுவதும் முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பூந்தமல்லி பணிமனை கட்டும் பணிகள் 82 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. இன்னும் 6 மாதத்தில் பணிமனை பணிகள் அனைத்தும் முடிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சாலையோர கடைகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- வடசென்னையில் ஒழுங்குபடுத்தப்பட்ட மாதிரி உணவு விற்பனை மண்டலம்.
பெரம்பூர்:
சென்னையில் சாலையோரத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சாலையோர கடைகளை முறைப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து உணவு விற்பனை மண்டலத்தை தனியாக ஏற்படுத்தி அதில் சாலையோர கடைகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக வடசென்னையில் முதன் முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் மாதிரி உணவு விற்பனை மண்டலம் அமைய உள்ளது. இதற்காக எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையில் அமைந்துள்ள கேப்டன் காட்டன் கால்வாய் அருகே உள்ள இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர்.
இந்த இடம் சுமார் 270 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் 150 உணவு கடைகள் மற்றும் பூ விற்பனை, பொருட்கள் விற்பனை கடைகள் அமைய உள்ளது. இதற்கான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து பார்வையிட்டனர்.
இது தொடர்பான அறிக்கை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்த
தும் விரைவில் அப்பகுதியில் கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, `எம்.கே.பி.நகரில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாய் பகுதி அகலமான நடைபாதைகள் கொண்ட முக்கிய சாலை என்பதால் இந்த பகுதியை தேர்வு செய்துள்ளோம்.
தற்போது அங்கு பஸ்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். உணவு விற்பனை மண்டலம் அமைக்க இந்த சாலை பொருத்தமானது. 96 விற்பனையாளர்கள் அங்கு வர ஏற்கனவே தயாராக உள்ளனர் என்றார்.
- அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என மாற்றினார்கள்.
- அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மட்டுமே திமுக அரசு செய்கிறது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்திற்கான காரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
* அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் மூடுவிழா நடக்கிறது.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.
* விலைவாசி, வரி உயர்வு, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
* திமுக அரசு அம்மா உணவகத்தை நீர்த்து போக செய்துள்ளது.
* அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என மாற்றினார்கள்.
* அம்மா மருந்தகங்களை மூடி விட்டு முதல்வர் மருந்தகங்களை தொடங்குகின்றனர்.
* அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மட்டுமே திமுக அரசு செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.






