என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
- குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தின் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதே போல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயே துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, பொம்மை முதல்வர் காவல்துறையை எந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி!
முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
வேலியே பயிரை மேய்ந்தாற்போல், POCSO வழக்கு முதல் கொள்ளை வரை காவல்துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
காரணம்? இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத வெற்று பொம்மை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின்
தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி..... எந்தப் பயனும் இல்லை!
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க. அரசை 2026-ல் புரட்சித் தமிழர் தலைமையில் வீட்டுக்கு அனுப்பி, #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சுசீந்திரம், சாமிதோப்பு, மயிலாடி பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மயிலாடியில் அதிகபட்சமாக 126.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொட்டாரம், கன்னிமார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, முக்கடல், இரணியல், கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.47 அடியாக இருந்தது. அணைக்கு 266 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது. அணைக்கு 268 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.05 அடியாக உள்ளது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் பஸ்கள் காலை 7.30 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
- பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்!
சென்னை:
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருது புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை நாளை சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் தோட்டா தரணி பெறுகிறார். இதையொட்டி தோட்டா தரணிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியே" அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்! என்று கூறியுள்ளார்.
- கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த 4-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்ற-இறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 480-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியது. தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருப்பதால் அதன் விலை உயர ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,800 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-11-2025- ஒரு கிராம் ரூ.170
10-11-2025- ஒரு கிராம் ரூ.169
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
07-11-2025- ஒரு கிராம் ரூ.165
- சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்கள் வருமாறு:-
| எண் | விடுமுறை நாட்கள் | தேதி | கிழமை |
| 1 | ஆங்கில புத்தாண்டு | 1.1.2026 | வியாழன் |
| 2 | பொங்கல் | 15.1.2026 | வியாழன் |
| 3 | திருவள்ளுவர் தினம் | 16.1.2026 | வெள்ளி |
| 4 | உழவர் திருநாள் | 17.1.2026 | சனி |
| 5 | குடியரசு தினம் | 26.1.2026 | திங்கள் |
| 6 | தைப்பூசம் | 1.2.2026 | ஞாயிறு |
| 7 | தெலுங்கு வருட பிறப்பு | 19.3.2026 | வியாழன் |
| 8 | ரம்ஜான் | 21.3.2026 | சனி |
| 9 | மகாவீர் ஜெயந்தி | 31.3.2026 | செவ்வாய் |
| 10 | ஆண்டு வருட கணக்கு | 1.4.2026 | புதன் |
| 11 | புனித வெள்ளி | 3.4.2026 | வெள்ளி |
| 12 | தமிழ் புத்தாண்டு /அம்பேத்கர் பிறந்தநாள் | 14.4.2026 | செவ்வாய் |
| 13 | மே தினம் | 1.5.2026 | வெள்ளி |
| 14 | பக்ரீத் | 28.5.2026 | வியாழன் |
| 15 | முகரம் பண்டிகை | 26.6.2026 | வெள்ளி |
| 16 | சுதந்திர தினம் | 15.8.2026 | சனி |
| 17 | மிலாது நபி | 26.8.2026 | புதன் |
| 18 | கிருஷ்ண ஜெயந்தி | 4.9.2026 | வெள்ளி |
| 19 | விநாயகர் சதுர்த்தி | 14.9.2026 | திங்கள் |
| 20 | காந்தி ஜெயந்தி | 2.10.2026 | வெள்ளி |
| 21 | ஆயுத பூஜை | 19.10.2026 | திங்கள் |
| 22 | விஜய தசமி | 20.10.2026 | செவ்வாய் |
| 23 | தீபாவளி | 8.11.2026 | ஞாயிறு |
| 24 | கிறிஸ்துமஸ் | 25.12.2026 | வெள்ளி |
- சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர்.
- நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் வனப்பகுதியில் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பணியில் இருந்த காவலாளிகளான பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகிய இருவரையும் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இதில் தேவதானத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்பவரிடம் நடந்த விசாரணையில் காவலாளிகளை கொன்று உண்டியலை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவருடன் சேர்ந்து முனியாண்டி (30) என்பவரும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதற்கிடையே இன்று காலை 6 மணி அளவில் சேத்தூர் அருகே உள்ள அசையாமணி விலக்கில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை ஆஞ்சநேயர் கோவில் அருகே கொள்ளையடித்த பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக நாகராஜ் கூறினார். அதனை கைப்பற்றுவதற்காக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கல்லணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு சென்றவுடன் புதைத்து வைத்திருந்த இடத்தின் அருகே நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார். உடனே அருகில் இருந்த இன்ஸ்பெக் டர் ரமேஷ் கண்ணா, நாகராஜின் வலது முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நாகராஜ் ஆகிய இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். கோவிலில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான முனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயகா நகர், கோரிமேடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் சாலை.
மாத்தூர்: எம்எம்டிஏ 1 முதல் 3வது பிரதான சாலை வரை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு.
- தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது.
- இவ்விருதை இதற்கு முன் சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருது புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை நாளை சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் தோட்டா தரணி பெறுகிறார்.
இந்த நிலையில், 'செவாலியே' விருது பெறும் தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் க்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
Oxford-இல் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணி அவர்களுக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான Chevalier விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது!
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்! என்று கூறியுள்ளார்.
செவாலியே விருதை இதற்கு முன் சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
- இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவது, மக்கள் விரோதச் செயல்கள் நடைபெற்று வருவது போன்ற தொடர்கதையாகிவிட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். இந்த திமுக ஆட்சி தமிழ்நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
அதேபோல், திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில், மக்களின் பல்வேறு அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. மாறாக, பல்வேறு வரி உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்தி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை. அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் காவலர் ஒருவர் பாலியல் சீண்டல் என, தமிழ்நாட்டின் வரலாற்றில் திமுக-வின் ஆட்சிக் காலம் ஒரு கரும்புள்ளி என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ் நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் என தொடர்ந்து நடைபெற்று வரும் மகளிர் விரோத, மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டக் கழகம் மற்றும் மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 14.11.2025 - வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் காந்தி சிலை அருகில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அலட்சியப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .
- 240 ரூபாய்க்கு பதிலாக 250 ரூபாய் வசூலித்துள்ளார்.
- இது தொடர்பாக கேள்வி கேட்டும், பதில் கூறாததால் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு.
சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர், டாஸ்மாக் கடையில் 240 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார். கடை விற்பனையாளர் 250 ரூபாய் வசூலித்துள்ளார்.
பாட்டிலில் 240 ரூபாய்தான் போட்டிருக்கிறது என விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. இது வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தன்னிடம் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திரும்பி வழங்கிட உத்தரவிடக்கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரியும் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார்.
அந்த கடை விற்பனையாளர் தேவராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் வழங்காவிடில் ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டுள்ளது.






