என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது.
    • இவ்விருதை இதற்கு முன் சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

    பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருது புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை நாளை சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் தோட்டா தரணி பெறுகிறார்.

    இந்த நிலையில், 'செவாலியே' விருது பெறும் தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் க்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    Oxford-இல் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணி அவர்களுக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான Chevalier விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது!

    அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்! என்று கூறியுள்ளார்.

    செவாலியே விருதை இதற்கு முன் சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×