என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?
- கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த 4-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்ற-இறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 480-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியது. தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருப்பதால் அதன் விலை உயர ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,800 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-11-2025- ஒரு கிராம் ரூ.170
10-11-2025- ஒரு கிராம் ரூ.169
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
07-11-2025- ஒரு கிராம் ரூ.165






