என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூல்: இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு
- 240 ரூபாய்க்கு பதிலாக 250 ரூபாய் வசூலித்துள்ளார்.
- இது தொடர்பாக கேள்வி கேட்டும், பதில் கூறாததால் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு.
சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர், டாஸ்மாக் கடையில் 240 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார். கடை விற்பனையாளர் 250 ரூபாய் வசூலித்துள்ளார்.
பாட்டிலில் 240 ரூபாய்தான் போட்டிருக்கிறது என விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. இது வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தன்னிடம் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திரும்பி வழங்கிட உத்தரவிடக்கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரியும் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார்.
அந்த கடை விற்பனையாளர் தேவராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் வழங்காவிடில் ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டுள்ளது.






