என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
    • மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாயைில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.

    விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

    மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

    அடை மழை காரணமாக மதுரை நகரில் உள்ள ஆத்திக்குளம் கண்மாயில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. கரை பலவீனமாக இருந்தால் சிறிது நேரத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதேபோல் புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் செல்லூர், அய்யர் பங்களா, ஆத்திக்குளம், நரிமேடு உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இதைதொடர்ந்து, மதுரை செல்லூர் பகுதியில் நிரந்தரமாக வெள்ள பாதிப்பை தடுக்க, உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 2 நாட்களாக இரவு, பகலாக நடத்தட்டு வந்தது.

    இந்நிலையில், கால்வாயில் நேற்று இரவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்கு செல்லும் இந்த கால்வாய் மூலம், பந்தல்குடி கால்வாயில் செல்லும் அதிகளவு தண்ணீரை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கண்மாயை சுற்றிய பகுதிகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

    • உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் (நேற்று) நடத்தினோம்.

    சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 

    அப்போது, தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சரின் உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவமழைத் தொடர்பாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் (நேற்று) நடத்தினோம்.

    வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் - அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தோம்.

    குறிப்பாக கடந்த அக்டோபர் 14,15,16-ஆம் தேதிகளில் பெய்த மழையின் போது, மண்டல அளவில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய கண்காணிப்பு அலுவலர்கள், களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
    • இதில் திரைத்துறையில் உள்ள பலரும், படத்தில் நடித்த நடிகர்களும் பங்கேற்றனர்.

    சென்னை:

    கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரைத்துறையில் உள்ள பலரும், படத்தில் நடித்த நடிகர்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:

    என்ன வெறுப்பை விதைத்தாலும் நாம் அன்பை மட்டுமே பரிமாறுவோம்.

    வீட்டில் உள்ள அத்தனை பெண்களுக்கும் நன்றி.

    சூரியன் மேலே இருந்தால் ஒரு புதிய விடியல் கிடைத்திருக்காது.

    ரசிகர்களாகிய உங்களின் அன்பு எனக்கு விலைமதிப்பில்லாதது.

    வில்லில் அம்பு பின்னால் சென்றால் தான் நினைத்த இலக்கை அடைய முடியும்.

    அன்பாக இருப்போம், நல்லதையே செய்வோம்.

    உன் ரத்தமும், என் ரத்தமும் வேறு வேறல்ல.

    எனது நண்பரின் புதிய பாதைக்கு நல்வரவு என தெரிவித்தார்.

    • நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதி.
    • தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடலுக்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.

    விஜய், இன்று மாலை 6 மணியளவில் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாநாடு திடல் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து விஜய் ஆய்வு செய்துள்ளார்.

    கேரவனில் பொதுச் செயலாளர் ஆனந்துடன் மற்றும் மாநாடு குழுவினருடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தவெக மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டறிய விஜய் புது வியூகம் வகுத்துள்ளார்.

    தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.

    மாநாட்டிற்கு வரும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் அதனை ஸ்கேன் செய்து, வருகை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர்.
    • இளைஞர்கள் திண்டிவனத்தில் ராமதாஸை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதி தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர்.

    தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸை தவெக-ல் இருந்து விலகிய இளைஞர்கள் நேரில் சந்தித்தனர்.

    மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், பாமகவில் இணைந்ததாக இளைஞர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திண்டிவனத்தில் ராமதாஸை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடக்கிறது.
    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடல் முன்பு சாலையோரம் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.

    செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது. வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை.

    தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது.

    • நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில் சேவையில் மாற்றம்.
    • எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை இயக்க ஏற்பாடு.

    புதிய தண்டவாள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    மேலும், நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பயணகள் நலன் கருதி கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • முதல் அரசியல் மாநாட்டிற்காக தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல் அரசியல் மாநாட்டிற்காக தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது:-

    அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்!

    தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தாம்பாத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
    • தாம்பரத்தில் மாலை 5.10க்கு புறப்பட்டு திருச்சி வழியாக மதுரை செல்லும்.

    தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தீபாவளி முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பின்னர், வார இறுதி நாட்களை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படை எடுக்கின்றனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்.29, 30, நவ.02 ஆகிய தேதிகளில் தாம்பாத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    தாம்பரத்தில் மாலை 5.10க்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக நள்ளிரவு 1.20க்கு மதுரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் முன்பதிவு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்தன.

    • கிளாம்பாக்கம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
    • கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

    தீபாவளி பண்டிகையையொட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மேலும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல், கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மேலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    • சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.
    • திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன.

    தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நாளை விழுப்புரம் வி.சாலையில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு பாதை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம், வி.சாலை நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாநாடு முன்னிட்டு கூடுதலாக 3 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட  வாய்ப்பு உள்ளது.

    மாநாட்டு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், மாநாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஜீரோ டிராபிக் என்றால் வெளி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தவெக மாநாட்டிற்கு தொடர்புடைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமது வழங்கப்படும்.

    மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை- திருச்சி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றிவிடப்படுகின்றன.

    திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன. போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கி.மீ தூரம் வரை பயண நேரம் அதிகமாகலாம் எனவும் கூறப்படுகிறது.

    ×