என் மலர்
உள்ளூர் செய்திகள்
- டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையின் தாக்கத்தை பொறுத்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது.
திருவாரூர்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது. அவ்வப்போது தூறல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அங்கு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
- இன்று முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவில் மலைமேல் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 2-ந்தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. முருக பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் முருகபெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மாலை 4.45 மணிக்கு முருகபெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி 6-வது நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் காரைக்காலிலும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
- சத்குரு எனும் தனிநபரைக் குறி வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்ரை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது மக்களின் பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு இல்லை, சத்குரு எனும் தனிநபரைக் குறி வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பினை ஈஷா அறக்கட்டளை வரவேற்கிறது.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "கடந்த பல ஆண்டுகளாக சத்குரு அவர்கள் செய்து வரும் அனைத்து நல்ல பணிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குருவை பத்ம விபூஷன் விருதிற்கு பரிந்துரைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதாகவும், சத்குருவுக்கு எதிராக எந்த எதிர்மறையான விஷயங்களும் இல்லை" என்றும் கூறினார்.
இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்த அமைப்பு, இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவிற்கு எதிராக வேறொரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தது. அந்த வழக்கை "உள்நோக்கத்துடன் தொடரப்பட்டு வழக்கு" எனக் கூறி அப்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது நினைவுக்கூறதக்கது.
ஈஷாவின் நற்பெயருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் இடையூறு மற்றும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு குழுவாக சிலர் செயல்பட்டு, ஈஷா குறித்து அவதூறுகளை பரப்பியும், பொதுநல மனு என்ற பெயரில் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வாறு அவதூறு குற்றச்சாட்டுகளோடு உள்நோக்கத்துடன் ஈஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளை, உண்மையின் பக்கம் நின்று தள்ளுபடி செய்து நியாயமான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர்.
- அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.
இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டது.
இதற்காக அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.
3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.
அதன்படி, லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது.
- கட்சிப் பணிகளை விரைவுபடுத்த "கள ஆய்வுக் குழுவினர்" நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டம் வாரியாக கள ஆய்வு செய்து, கட்சி பணிகளை விரைவுப்படுத்துவதற்காக 'கள ஆய்வுக் குழுவினர்' நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும். புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கழகத்தின் சார்பில் 'கள ஆய்வுக் குழு' கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் C. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, வரகூர் அ. அருணாசலம்.
மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
- பாதுகாப்பிற்காக 4500 போலீசார் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. முருகப் பெருமானான சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக வென்பட்டு உடுத்தி, வெட்டிவேர் மயில் தோகை மாலை அணிந்து கடற்கரைக்கு வருகை தந்தார்.
அதன்படி, முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகம் கொண்ட தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்றுமுறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிராக நின்றான். 4.54 மணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.
அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்றுமுறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். 5.09 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் சம்ஹாரம் செய்தார்.
தொடர்ந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான். தொடர்ந்து 5.22 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்து கொண்டார்.
- "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- தினத்தந்தி நாளிதழின் தலையங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்திட உறுதி பூண்டுள்ளார். அதற்காக, பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டம் பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். இதில் தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பாக, தினத்தந்தி நாளிதழில் இன்றைய தலையங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" - ஆதிதிராவிடர் – பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் #DravidianModel-இன் புரட்சித் திட்டம்!
இதுவரையில்,
- பயனாளிகள் - 1988
- கடன் - ரூ.453 கோடி
- மானியம் - ரூ.230 கோடி
தினத்தந்தியின் இந்தத் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம் என்றாலும்; இதன் நோக்கம் தேவையுள்ள மக்களுக்கு முழுதாகச் சென்றடைய, விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயரவேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார்.
- சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர்.
குத்தாலம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் அமைந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை கடந்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்ட சம்பவம் வெளியாகி வைரலாகியது.
இதுகுறித்து சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார். அந்த மடத்தை நிர்வாகம் செய்ய அவரை டிரஸ்டியாக நியமனம் செய்ய ஏதுவாக ஹேமாஸ்ரீயை பதிவு திருமணம் செய்து கொண்டேன். நான் எதையும் மறைக்கவில்லை.
இதற்கு முன்பு சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர். சூரியனார்கோவில் ஆதீனத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவி வாங்கி ஆதீனகர்த்தராக பதவியில் இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், 54 வயதாகும் சூரியனார் கோவில் ஆதீனம் திடீரென திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமரன் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது மொபைல் எண்ணை கூறுவது போல ஒரு காட்சி வரும்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது மொபைல் எண்ணை கூறுவது போல ஒரு காட்சி வரும்.
அந்த காட்சியில் வரும் மொபைல் எண் தன்னுடைய மொபைல் எண் என்று சென்னையை சேர்ந்த மாணவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணிற்கு ரெபேக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டி தினமும் நிறைய அழைப்புகளும், வாய்ஸ் மெசேஜும் வருவதாக அந்த மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக படக்குழுவினருக்கு சமூக வலைத்தளத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் இப்படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
- அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா.
- அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.
இந்நிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றுள்ளார்.
முன்னதாக, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்ப வாகனங்கள் நிறுத்தும் வசதி, தங்கும் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அமைச்சர் சேகர்பாபு செய்து தந்துள்ளார்.






