search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pushpanjali"

    • செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வினாயகர் தீப்பாச்சி மாரியம்மன் கோவில் கொடை விழா தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் ஹோமங்கள், நண்பகல் நேரத்தில் நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்பாளுக்கு பல்வேறு நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

    செங்கோட்டை:

    செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் நவராத்திரி மற்றும் லட்சார்சணை நிறைவு விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி குலசேகர நாதருக்கு கும்பபூஜை ஜபம், ஹோமத்துடன் 35 வகை நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . மேலும் ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பஜனை பாடல்கள் நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள், மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.

    • செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவானது கடந்த 4-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்். விழாவானது கடந்த 4-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கும்பபூஜை, ஹோமம் அபிஷேகதீபாரதனையும், இரவு சிறப்பு தீபாரதனை மற்றும் அருள் பிரசாதமும் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான கோகுலாஷ்டமி அன்று கும்பபூஜை ஜபம், ஹோமம். சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பூஜைகள், பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கடைசி நாளன்று காலை ஹோமங்கள், நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபா ராதனை காண்பிக்க ப்பட்டது.இரவு அம்பாளுக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அவர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.


    ×