செங்கோட்டை சிவன் கோவிலில் புஷ்பாஞ்சலி

தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
மலர்களை கொண்டு கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சி.
மலர்களை கொண்டு கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சி.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் நவராத்திரி மற்றும் லட்சார்சணை நிறைவு விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி குலசேகர நாதருக்கு கும்பபூஜை ஜபம், ஹோமத்துடன் 35 வகை நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . மேலும் ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பஜனை பாடல்கள் நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள், மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com