என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.
- கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது.
மதுரை:
திமுக கூட்டணி புயலில் அடித்துக்கொண்டு போகும் என்று சொல்கிறீர்களே...
துளி கூட அசையாது... ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... ஆலமரத்தை அழிக்க சில பேர் வேரெடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று உதயநிதி சொல்கிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சொல்வது எல்லாம் சரிதான். வெள்ளத்தில் ஆலமரமே பிடுங்கிக்கொண்டு போயிருக்கிறது.
உலகமே அழிந்திருக்கிறது. உதயநிதிக்கு தெரியவில்லை.
எத்தனை கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் பலம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் நமக்கு எஜமானர். அந்த மக்களுக்கு செய்யாமல், கூட்டணி பலத்தோடு மக்களை போய் சந்திப்போம் என்று சொன்னால் என்ன அர்த்தம்.
பந்தல்குடி வாய்க்காலில் எத்தனை ஜேசிபி கொண்டு வேலை நடக்கிறது என்று பாருங்கள்.
இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.
மக்கள் பணியை மட்டும் பாருங்கள் என்று பொதுச்செயலாளர் சொல்லி இருக்கிறார்.
மக்களுக்கான திட்டங்கள் சென்றடைகிறதா?, கட்டமைப்பை வலுப்படுத்துங்கள், மக்கள் குறைகளை எடுத்துச்சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பாமக கட்சி கூட்டணி குறித்து எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். 10 நாளைக்கு முன்பு எங்களுடன் தான் கூட்டணி என்றார்கள். 10 நாளில் எல்லாம் மாறி விட்டது.
கூட்டணி என்பது இப்போது பேசக்கூடிய தருணம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது. இப்போது கூட்டணி பற்றி பேசுவது வேஸ்ட்.
கிழக்கு பகுதியில் உள்ள 28 வார்டுகளில் மாநகராட்சி பணி மெத்தனமாக உள்ளது. 100 வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அமைச்சர் மூர்த்தி இருக்கும் தொகுதியிலே இதுபோல் இருக்கிறது என்று கூறினார்.
- துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார்.
- பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரம் அழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (வயது 40) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு திருமணமாகி பின்னர் கடந்த 2012ல் விவாகரத்து ஆனது. இவர் வயலூர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் இலங்கையை சேர்ந்த இளங்கோ என்கிற ஜானி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார். இதற்காக இளங்கோவை அழைத்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் துபாயில் இருந்தார். அப்போது அவர் உடை மாற்றுவதையும் குளிப்பதையும் இளங்கோ வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அதை வைத்து இளங்கோ அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதில் நான் தற்போது ஈரோட்டை சேர்ந்த ஜீவா என்பவரை மறுமணம் செய்து முசிறியில் வசித்து வருகிறேன். என் கணவரை விட்டு பிரிந்து லண்டனுக்கு வந்து விட வேண்டும். இல்லாவிட்டால் எனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலும் நாம் தமிழர் குழுவிலும் பதிவேற்றம் செய்து விடுவேன் என இளங்கோ மிரட்டி வருகிறார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் இளங்கோ மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தில் நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விஜய்யின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகர் விஜய் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டையொட்டி, பரந்த பார்வையோடு பொதுநல நோக்கோடு, "அ.தி.மு.க.வும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமே" என நாம் கூறியதை, ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நமது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேகமாக களத்தில் இறங்கினர்.
தற்போது, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்யுடன் நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர்.
அவர் அண்மையில் மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணைய விருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.
நடிகர் விஜய் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது 'விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசி உள்ளார்' என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன. அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.
நாம் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அதனைவிட்டு வெளியேறும் தேவை ஏதுமில்லை என்பதை அறிக்கை மற்றும் நேர்காணல்கள் மூலம் தெளிவுப்படுத்தினோம்.
எனினும், மீண்டும் அவர்கள் நம்மைக் குறிவைத்து அரசியல் சதிவலைகளைப் பின்னுகின்றனர்.
டிசம்பர் -6, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளன்று "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அவ்விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டுகின்றனர். நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கின்றனர்.
இதற்கான அழைப்பு கடிதத்தை கொடுக்கும் போது நடிகர் விஜய்யும் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினார்கள். அப்போதைய சூழலில் நடிகர் விஜய்யின் கட்சி மாநாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய்யின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்"
திட்டமிட்டே நம் மீது அய்யத்தை எழுப்புவோர் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; வி.சி.க.வுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நய வஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகி விடக்கூடாது.
தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், கருணை அடிப்படையில் 49 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்.மா.சுப்பிரமணியன் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது, ஆகிய 2 விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோருக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய 5 குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் 2-வது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த 3 வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது, தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
- வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
* காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
* வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- தி.மு.க. 3 மாதத்துக்கு முன்பே தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இப்போது 144 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர்.
சென்னை:
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.
அதிலும் குறிப்பாக தி.மு.க. 3 மாதத்துக்கு முன்பே தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளது. அதில் இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அழைத்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதன் அடிப்படையில் கட்சி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி 234 தொகுதிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்களை நியமித்து உள்ளார். அவர்கள் தொகுதியில் நடக்கும் பணிகளை சரிபார்த்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதே பாணியில் கட்சியை அடி மட்ட அளவில் பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இப்போது 144 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் இன்னும் 90 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் செயல் வீரர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க ஆலோசனை மேற் கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 3-வது மிகப்பெரிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை உருவாக்கி விட வேண்டும் என்ற அடிப்படையில் திருமாவளவன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கட்சியில் புதிதாக இளைஞர்களையும் மகளிரையும் சேர்த்து வருகிறார்.

அந்த வகையில் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மதுபோதை ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு ஒரு வெற்றி மாநாடாக அமைந்தது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கம் இப்போது அரசியலில் பேசும் பொருளாகி விட்டது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிப்பதால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் திருமாவளவன் பங்கு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது.
இந்த நிலையில் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் இடம் உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தார். இது அரசியலில் மேலும் பரபரப்பை உருவாக்கியது.
இதற்கு, திருமாவளவன் விளக்கம் அளிக்கையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு என்றார். அதாவது நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும், பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும். அதனை சிதறடிப்பதற்கோ, சிதைப்பதற்கோ நாம் எவ்வாறு இடம் அளிக்க இயலும் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் வருகிற 2026 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட பலர் கட்சித் தலைமையில் இப்போதே விருப்பம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்று ஆதவ் ஆர்ஜூன் டீம் ஒரு சர்வே எடுத்து வருகிறது.
ஏனென்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் கிடைத்த வாக்குகளை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 சதவீதம் ஓட்டு என சொல்வதால் அதை மறுக்கும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வி.சி.க. ஓட்டு எவ்வளவு தி.மு.க.வுக்கு சென்றிருக்கும் என்பதை அறிய இந்த சர்வே மேற்கொள்ளப்படுவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக கூறும் வி.சி.க.வினர் அது எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க இந்த கள ஆய்வு பயன்படும் என்று கூறுகின்றனர். இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி கூறியதாவது:-
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக வி.சி.க. உள்ளது. எங்கள் கட்சியின் வாக்கு வங்கி ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமாக உள்ளது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாகி கொண்டு வருகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நாங்கள் 15 தொகுதிகளை கேட்டோம். நாகை, திருப்போரூர், வானூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர், அரக்கோணம் ஆகிய 6 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் வானூர், அரக்கோணம் தவிர மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
இந்த முறை வி.சி.க.வில் போட்டியிட நிறைய பேர் உள்ளதால் கட்சித் தலைவர் எப்படியும் 25 தொகுதிகளை கூட்டணியில் கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருப்பதால் எங்கள் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
- மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதி.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் அருகே உள்ள தனியார் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மருத்துவமனையை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
- மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படுகிறது.
- செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. அதற்கான மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என்று மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படுகிறது.
கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன.
448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
- கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.
- விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
- திருப்பூரில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திருப்பூர் வீரபாண்டி பிரிவு ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகிறது மீதமுள்ள பால் கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருப்பூரில் 50ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் விரைவில் பன்னீர் பேக்டரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தான் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் தான் பால் விலையை இன்னும் உயர்த்தாமல் ரூ.40க்கு வழங்கி வருகிறோம். ஏழை எளிய மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு விஜய் நேற்று வாழ்த்து தெரிவிக்காத நிலையில், சீமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- விஜய் கமல்ஹாசனுக்கு மட்டும் வாழ்த்து கூறாதது ஏன் என அரசியல் பார்வையாளர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.
சென்னை:
மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு விஜய் நேற்று வாழ்த்து தெரிவிக்காத நிலையில், சீமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புமணி, திருமாவளவன் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் கமல்ஹாசனுக்கு மட்டும் வாழ்த்து கூறாதது ஏன் என அரசியல் பார்வையாளர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.
ஒருவேளை தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக கமல் செயல்படுவதால், தி.மு.க.-வை எதிர்த்து அரசியல் செய்ய எத்தனிக்கும் த.வெ.க. தலைவர் விஜய், கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து இருக்கலாம் என கருதப்படுகிறது.






