என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.
    • அவரை போல் பிரகாசமான அரசியல் ஞானஒளி நான் பெறவில்லையே என வருத்தமாக இருக்கிறது” என்றார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ''ராமதாசுக்கு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டு கொண்டு இருப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?'' என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு டாக்டர் ராமதாஸ், ''அவரை (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) போல் பிரகாசமான ஞானஒளி எனக்கு இல்லைதான். நான் என்ன செய்ய முடியும்? அவரை போல் பிரகாசமான அரசியல் ஞானஒளி நான் பெறவில்லையே என வருத்தமாக இருக்கிறது" என்றார்.

    மேலும் அவரிடம், 2026-ம் ஆண்டு தேர்தல் குறித்து கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

    • விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்
    • திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்

    தமிழகத்தில் இன்று காலை 10 வரை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்து வருவதாகவும், இது ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் 30-ந்தேத ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால்- மகாபலிபுரம் இடைகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நானை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீர் மூழ்கி நாசமாகின.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
    • 30-ந்தேதி 50 முதல் 60 கி.மீ. வேக காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு.

    தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மதியம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்கியது.

    இதன் காரணமாக மாலை 5.30 மணியளவில் ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மிகவும் குறைந்தது. மணிக்கு 3 கி.மீ. என்ற அளவிற்கு குறைந்தது.

    நேற்றிரவு 11.30 மணியளவில் அசையாமல் அதே இடத்தில் நீடித்தது. இந்த நிலையில் திரிகோணமலைக்கு கிழக்கு- வடகிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும், நாகைப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

    இது அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று காலை சுமார் 11 மணியளவில்) சுறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. வரும் 30-ந்தேதி (நாளை மறுதினம்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 50 முதல் 60 கி.மீ. வேக காற்றுடன் வடக்கு தமிழகம்- புதுச்சேரி கடற்கரை பகுதிகளான காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்தனர்.

    தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

    அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிறந்த நாளில் உங்கள் அனைவரின் வாழ்த்து மழையிலும் நனைந்தோம். வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் அன்பும், நன்றியும்.

    2026ல் இலக்கு 200 எனும் லட்சியப் பயணத்தை நோக்கி வீறுநடை போடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
    • தனியார் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
    • 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

    அதன்படி, அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது.

    இதைதொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    இந்நிலையில், 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றரிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
    • கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

    நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "விவாகரத்து செய்யத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே, ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

    விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தைக்கு இன்று நேரில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக மாறுகிறது.
    • பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக மாறுகிறது.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடமேற்கில் மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், இன்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
    • கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் சாலை ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது.

    விபத்தில், இருவரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கல்பட்டு அருகே கார் மோதி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 02.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி (71), லோகம்மாள் (வயது 56), யசோதா (54), விஜயா (53), கௌரி (52) ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம்.
    • தமிழ்நாட்டிற்கு விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு தற்போது செயல்படுத்தாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கு விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4-1-2024 நாளன்று பிரதமருக்கு தான் எழுதியிருந்த கடிதத்தினை முதல்வர் நினைவுகூர்ந்துள்ளார்.

    மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, இத்திட்டத்தில் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்திடப் பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள்

    1. விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

    2. இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35-ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும்.

    3. கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்துத் தலைவருக்கு பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இந்நிலையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்றும், இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும், இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறுகிறது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.

    • ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயல்) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    இது அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயல்) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக எண்ணூர், திருவெற்றியூர், காசிமேடு ஆகிய பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலில் ஆழம் குறித்தும் பாறைகள் இருக்கும் இடத்தை முன்கூட்டி கண்டறிய பொறுத்தப்படும் மிதவை கருவி ஒன்று மெரினா கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அதனை தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டையிலும் ஒரு மிதவை கருவி கரை ஒதுங்கி உள்ளது.

    இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். மேலும் சில இளைஞர்கள் அந்த கருவியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    ×